கேப்டன் விஷயத்தில் விஜய் சொன்னது இதுதான்! ‘கோட்’ படத்தில் இருக்கும் ட்விஸ்ட்
Vijaykanth Vijay: தமிழ் சினிமாவில் விஜய் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்க அவருடைய நடிப்பில் கோட் திரைப்படத்தை எதிர்பார்த்து அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுதான் கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. டிரெய்லர் வெளியானாலும் அதில் சில சஸ்பென்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறது.
அது படம் வெளியாகும் போதுதான் தெரியும். வெங்கட் பிரபு அவருடைய வேலையை சரியாக செய்து விட்டார் என்று அனைவரும் வெங்கட் பிரபுவை பாராட்டி வருகிறார்கள். அதிலும் அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை மனதார பாராட்டி வருகிறார்கள். படத்தில் இரு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கார்த்திக் பேச்சைக் கேட்டு கேம் ஆடிய பானுப்பிரியா… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்
அவர்களுக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்துள்ளனர். பாடல்கள் வெளியாகி சோர்வடைந்திருந்த ரசிகர்களுக்கு இந்த டிரெய்லர் பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
விஜயின் பல படங்களின் வசனங்களை வைத்து வெங்கட் பிரபு ஒரு முயற்சியை செய்திருக்கிறார். ஏற்கனவே திரிஷா கோட் படத்தில் ஒரு பாடல் ஆடியிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அது சம்பந்தமாக எந்த ஒரு காட்சியும் டிரெய்லரில் இல்லை.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தின் டிரெய்லரில் காட்டாத முக்கிய பிரபலங்கள்! எங்க கிட்ட இருந்து தப்ப முடியுமா?
ஆனால் விஜயகாந்த் கண்டிப்பாக இருப்பார் என்று தெரிகிறது. ஏ.ஐ தொழில் நுட்பத்தில் கோட் படத்தில் விஜயகாந்தை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர். ஏற்கனவே விஜயகாந்த் குடும்பம் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரு பெரிய படத்தில்தான் பயன்படுத்தவேண்டும் என கூறியிருந்தார்கள்.
அதற்கேற்ற வகையில் விஜயின் கோட் படமே சரியாக அமைந்து விட்டது. விஜயும் வெங்கட் பிரபுவிடம் ‘விஜயகாந்தை பார்க்கும் போது பொம்மை மாதிரி தெரியக் கூடாது. உண்மையான விஜயகாந்த் போலத்தான் தெரியவேண்டும் . அப்படி இல்லையென்றால் வேண்டவே வேண்டாம்’ என கறாராக சொல்லிவிட்டாராம் விஜய்.
இதையும் படிங்க: விஜயால் பொங்கினாரா அஜித் இயக்குனர்.. நடந்ததே வேற? இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல!