Actor Vijaysethupathi: கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலங்களில் தனுஷ், சசிகுமார் போன்ற நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து தற்போது ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு என தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
மக்கள் செல்வன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மாஸ் காட்டியதை விட வில்லனாக தான் சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்ததன் மூலம் தொடர்ந்து கோலிவுட்டில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இவர்தான் வில்லன் என்ற அளவுக்கு இவருடைய நிலைமை மாறியது.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாரின் கணிப்பைப் பொய்யாக்கிய இயக்குனர்… அட அது அந்தப் படமா?
ஆனால் இதை ஒரு போதும் விஜய் சேதுபதி ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு பக்கம் வில்லனாக நடித்தாலும் ஹீரோ அந்தஸ்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. வில்லனாகவே மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹீரோவாக அவர் நடித்து வெளியான திரைப்படம் மகாராஜா. அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் அவருடைய நடிப்பு பெருமளவு பேசப்பட்டது. இதுவரை இல்லாத அளவு மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியை வேறொரு கோணத்தில் பார்க்க முடிந்தது .
இதையும் படிங்க: இத்தனை அவார்டுகளை வாங்கி என்ன பயன்? பாரதிராஜாவுக்குள் இருக்கும் ஆறாத வலி என்ன தெரியுமா?
இந்த நிலையில் ஹிந்தி படம் குறித்து விஜய் சேதுபதி கூறிய ஒரு கருத்து வைரலாகி வருகின்றது. ஹிந்தியில் ஹிந்தியில் ஏக் ஹசீனா தீ, பட்லப்பூர், அந்தாதுண் போன்ற படங்கள் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதில் பட்லப்பூர் படத்தின் கதை மிகவும் விஜய் சேதுபதிக்கு பிடித்த கதையாம். அந்த படத்தின் கதை படமாக்கப்பட்ட விதம் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் அந்தப் படத்தை யாராவது தமிழில் ரீமேக் செய்ய நினைத்தால் அந்த படத்தில் நான் நடிக்க தயார் என கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…