சூப்பர்ஸ்டாரின் கணிப்பைப் பொய்யாக்கிய இயக்குனர்... அட அது அந்தப் படமா?
'வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு' என்று சொல்வார்கள், அதே சமயம் 'ஆனைக்கும் அடி சறுக்கும்' என்றும் சொல்வார்கள். இந்த 2 பழமொழிகளையும் நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் தமிழ்த்திரை உலகில் நடந்துள்ளது. அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விஷயத்தில் தான் இந்த மாதிரி நடந்துள்ளது.
அதாவது ரஜினிகாந்த் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்களில் தனக்கே உரிய ஸ்டைலுடன் மாஸாக நடிப்பவர். அவரது நடிப்பு என்றால் ஆறிலிருந்து 60 வயது வரை உள்ளவர்களும் ரசிப்பார்கள். ஒவ்வொரு படமும் கமர்ஷியலா ஹிட் அடிக்கும். அந்த வகையில் படங்களில் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதைத் தப்பாமல் செய்வார் ரஜினிகாந்த். ஆனால் ஒரு முறை மட்டும் அவரது கணிப்பு பொய்த்து விட்டது. அதைப் பற்றிப் பார்ப்போம்.
இந்தப் படம் தேறவே தேறாதுன்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவே பண்ணிட்டாராம். ஆனா நடந்ததே வேற. இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் 80களில் தமிழ்த்திரை உலகின் மிகப்பெரிய டைரக்டர். விஜயகாந்த், சத்யராஜ் வைத்து மிகப்பெரிய ஹிட்டுகளைக் கொடுத்தார் சுந்தரராஜன்.
வைதேகி காத்திருந்தாள் படத்தில் தயாரிப்பு தரப்பு எவ்வளவோ மறுத்தும் விடாப்பிடியாக விஜயகாந்த் தான் கதையின் நாயகனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று அவரையே கதாநாயகனாக நடிக்க வைத்தார். படமும் இமாலய வெற்றி பெற்றது. மைக் மோகனை வைத்து பயணங்கள் முடிவதில்லை படத்தை எடுத்தார். அது மெகா ஹிட்டானது. படத்தில் அத்தனை பாடல்களும் தேன்சிட்டாக இருந்தன.
அதனால் கதை கேட்காமலேயே கால்ஷீட் கொடுத்தாராம் சூப்பர்ஸ்டார். ஆனா நடந்ததே வேற. அந்தப் படம் 100 நாள்களுக்கு மேல சூப்பரா ஓடிருக்கு. முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 90 லட்சமாம்.
இதையும் படிங்க... கடைசி வரைக்கும் பண்ண மாட்டாருன்னு நினைச்ச ரஜினி ரசிகர்கள்!.. லேட்டா சம்பவம் செஞ்ச லோகேஷ் கனகராஜ்!..
தப்பா நினைச்சிட்டோமே இவரைப் போயின்னு அப்புறமா ஃபீல் பண்ணினாராம் சூப்பர்ஸ்டார். அந்தப் படம் தான் ராஜாதி ராஜா. 1989ல் வெளியான ராஜாதி ராஜா படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா. ரஜினியுடன் இணைந்து ராதா, நதியா, ஆனந்த்ராஜ், ஜனகராஜ், வினுசக்கரவர்த்தி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் எங்கிட்ட மோதாதே, மாமா உன் பொண்ணைக் கொடு, மலையாளக் கரையோரம், மீனம்மா மீனம்மா, வா வா மஞ்சள் மலரே ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.