அப்பா முன்னாடி ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க..- அவமானப்பட்ட எஸ்.ஏ.சி, பதிலடி கொடுத்த தளபதி!..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
அந்த ஆவலால்தான் பலமுறை சினிமாவில் தோல்வியை கண்டிருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் இருந்து வருகிறார் விஜய். விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்தான் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
விஜய் சிறுவயதாக இருக்கும்போதே அவர் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் விஜய்யை நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி. 1987 இல் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு விளையாட்டு என்கிற திரைப்படம் வெளியானது.
இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அதில் சின்ன வயது விஜயகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது என்கிற பாடலுக்கு விஜய் நடனம் ஆடும் காட்சி ஒன்று இருந்தது. ஆனால் விஜய்க்கு சுத்தமாக அப்போது நடனமாட தெரியாது. அவரே நடிக்க கற்றுக்கொள்ளதான் சினிமாவிற்கு வந்திருந்தார்.
அவமானப்பட்ட விஜய்:
டி.கே.எஸ் பாபு என்பவர்தான் அந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அவர் விஜய்க்கு ஆட வேண்டிய நடனங்களை பலமுறை கற்றுக்கொடுத்தார். ஆனால் ஒரு முறைக்கூட விஜய் ஒழுங்காக ஆடவில்லை. இதனால் கோபமான மாஸ்டர் “யாருடா உன்னை நடிக்க சொன்னது. நடிக்க தெரியலைனா போங்கடா, ஏன் இங்க வந்து உயிரை வாங்குறீங்க” என கூறியுள்ளார்.
அப்போது அதை காதில் வாங்கிய சந்திரசேகர் அவமானப்பட்டு தலையை குனிந்துக்கொண்டார். இதனால் கோபமடைந்த விஜய் அதற்கு பிறகு தினமும் வீட்டில் நடன பயிற்சி எடுக்க துவங்கினார். அதன் பிறகு 1994 இல் விஜய் நடித்த ரசிகன் என்ற படத்திற்கு அதே டி.கே.எஸ் பாபு டான்ஸ் மாஸ்டராக வந்தார்.
அப்போது அவரே மிரண்டு போகும் அளவிற்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் விஜய். அதை பார்த்த மாஸ்டர் நீ சினிமாவில் பெருசா வருவாய் என கூறி வாழ்த்தியுள்ளார்.