நேஷனல் அவார்டு நமக்கு செட்டே ஆகாது...! தன் நடிப்பை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்...

by Rohini |   ( Updated:2022-08-01 04:55:23  )
vijay_main_cine
X

என் மூஞ்சியை என்னாலயே பார்க்க முடியல...பின்ன எப்படி? பகிரங்கமாக கூறிய நடிகர் விஜய்

மக்கள் மத்தியில் பசுமரத்தாணி போல் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

vijay1_cine

மேலும் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கமெர்ஷியல் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்த விஜய் தன் அடுத்த அவதாரமாக ஸ்டண்ட் காட்சிகளில் இறங்கி தூள் கிளப்பினார்.

vijay2_cine

ஆனால் இதுவரைக்கும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் கவனம் செலுத்தாத விஜய் அந்த மாதிரியான வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார். இதை பற்றி அவரிடமே கேட்கையில் ஏன் வித்தியாசமான கெட்டப்-களில் உங்களை பார்க்க முடியவில்லையே என்று கேட்ட போது அந்த மாதிரியான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து நானே பார்த்துக் கொள்வேன்.

இதையும் படிங்களேன் – பாதியை மூடி மீதியை காட்டும் சஞ்சிதா ஷெட்டி…வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்…

vijay3_cine

ஆனால் அதை என்னாலயே பார்க்க முடியவில்லை எப்படி மக்கள் பார்ப்பார்கள்? அதனால் தான் ஒரே மாதிரியான தோற்றத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். மேலும் நேஷனல் அவார்டு பெறும் படங்களில் நடித்து அவார்டு வாங்கனும் ஆசை இருக்கா? என்று கேட்டதற்கு அந்த மாதிரியான படங்களை பார்ப்பதற்கு மட்டும் ஆசை படுவேன். ஆனால் நான் நடிக்கும் போது அந்த மாதிரியான எண்ணங்களில் நடிப்பதில்லை என்று கூறினார்.

Next Story