தன் அப்பா எப்படிப்பட்டவர்? விஜயே சொன்ன சுவாரஸ்ய தகவல்.. இப்படியுமா ஒரு தந்தை?

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஒரு மாஸ் ஹீரோவாக இன்று தமிழ் சினிமாவின் சொத்தாக திகழ்ந்து வருகிறார். திரையரங்கு உரிமையாளர்கள் விஜயை வைத்து தான் பெரும் லாபம் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு விஜயின் படங்களுக்கு நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வருகிறது.

அதே வேளையில் அவருடைய படங்களுக்கு வியாபாரமும் பெரிய அளவில் செய்யப்பட்டு வருகிறது .தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அவருடைய 69 ஆவது படத்தில் இணைய இருக்கிறார்.

இதையும் படிங்க: நல்லவனா இருந்தா மட்டும் போதாது…. வல்லவனாவும் இருக்கணும்… கண்ணதாசனின் எழுத்தில் எவ்வளவு அற்புதம்?!

இந்த இரு படங்களை முடித்துவிட்டு நேராக விஜய் அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். சில மாதங்களாக தன் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்து வந்த விஜய் சில தினங்களுக்கு முன்புதான் தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டினார்.

ஒருவேளை அரசியலுக்கு தன் தந்தையின் அறிவுரை ஏதாவது தேவைப்படுமா என்று கருதி கூட அவருடன் சேர்ந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய பெற்றோர்கள் மீது விஜய் எந்த அளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பது பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: நான் மட்டும் என்ன சொம்பையா?!.. எஸ்.கே. ரேஞ்சுக்கு சம்பளத்தை ஏத்திய தனுஷ்!..

அப்பா அம்மாவை நினைத்தாலே காதலுக்கு மரியாதை படத்தில் வரும் சிவக்குமார் மற்றும் ஸ்ரீவித்யாதான் நியாபகத்துக்கு வருவார்களாம். இவர்களின் கதாபாத்திரங்களை போன்றே உண்மையிலேயே எஸ்.ஏ.சியும் சோபாவும் இருப்பார்களாம். எந்த ஒரு விஷயம் ஆனாலும் விஜயை தனியாக அழைத்து எஸ்ஏசி அவருடைய அறிவுரைகளை கூறுவாராம் .

அதைப்போல ஷோபாவை பொறுத்த வரைக்கும் பட பட பட்டாசுதானாம். ஏதாவது செல்லச் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம் அவருடைய அம்மா. இதை ஒரு பத்திரிக்கை பேட்டியில் விஜய் கூறியிருக்கிறார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் ஆங்கர் விஜய் சாரதி! மீண்டும் மீடியா பக்கம் வராததற்கு இதுதான் காரணமா?

 

Related Articles

Next Story