நண்பனுக்கு ஒன்னுனா ஓடி வரும் தளபதி.. அஜித்தை நலம் விசாரிக்க வரும் விஜய்

Published on: March 8, 2024
vijay
---Advertisement---

Vijay Ajith: அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து அவர் சிகிச்சை குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் அஜித் ரசிகர்களை பதற்றம் அடைய வைக்கும் வகையில் அஜித்துக்கு ஏதோ ஏதோ சில பிரச்சினைகள் என பெரிய குண்டை தூக்கி போட்டனர். ஆனால் கடைசியாக வெளிவந்த தகவலின் படி அஜித்துக்கு காது மூளைக்கு செல்லக் கூடிய நரம்பில் வீக்கம் இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதுவும் அஜித் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளி நாடு போக இருப்பதால் உடல் பரிசோதனைக்கு வந்த போதுதான் தெரியவந்திருக்கிறது. அதனால் உடனே அகற்றிவிட்டார்களாம். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதை பற்றி கூறிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அஜித் அஜர்பைஜானுக்கு போனதுதான் தவறு என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: வேற மாறி இருக்காரே தனுஷ்!.. கூஸ் பம்ப்ஸை எகிற வைத்த D51 படத்தின் போஸ்டர்..

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை அங்கு ஆரம்பித்ததில் இருந்தே தொடர்ந்து படக்குழுவில் உள்ளவர்களுக்கு உடல் நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்ததாகவும் அஜித்துக்கு டூப் போட வந்தவர்களுக்கே ஏதோ பிரச்சினை ஏற்பட அவர்கள் திரும்பவும் இந்தியா வந்ததாகவும் செய்யாறு பாலு கூறினார். அதனால் அஜர்பைஜானில் போனதுதான் அஜித் செய்த தவறு என செய்யாறு பாலு கூறினார்.

மேலும் அஜித்தை பார்க்க விஜயும் மருத்துவமனைக்கு வர இருப்பதாகவும் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். இப்போது இருவருக்கும் இடையில் போட்டி இல்லாவிட்டாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் விஜய் வருவார் என்றும் அப்படி வந்தால் தமிழ் சினிமா ஒரு ஆரோக்கியமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் மக்களுக்கு புரியவரும் என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: ஆரம்பமே அதிருதே!.. விஜய் ஆரம்பித்து வைத்த அந்த செயலி.. ஒரு மணி நேரத்தில் முடங்கிய்து.. என்ன ஆச்சு?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.