ஆரம்பமே அதிருதே!.. விஜய் ஆரம்பித்து வைத்த அந்த செயலி.. ஒரு மணி நேரத்தில் முடங்கிய்து.. என்ன ஆச்சு?

டிஜிட்டல் இந்தியாவை மோடி அறிமுகப்படுத்தினாலும் படுத்தினார். விஜய் தான் தனது அரசியலுக்கு அதை சரியாக பயன்படுத்தி வருகிறார். எதுவாக இருந்தாலும், கூட்ட நெரிசலில் சிக்கி ஏன் கஷ்டப்படணும் என நினைத்த அவர் கட்சி அறிவிப்பு முதல் கட்சியின் உறுப்பினர் அட்டை சேர்க்கை அறிவிப்பு வரை ட்விட்டரிலேயே அரசியலை அமோகமாக ஆரம்பித்துள்ளார்.

கோட் படத்தில் நடித்து வரும் விஜய் இன்னமும் மீசை இல்லாத யங் லுக்கிலேயே நடித்து வருகிறார். சிஜி காட்சிகள் அதிகம் இருக்கும் நிலையில், அந்த கம்பெனி சொதப்பி விட்டால் படமே படுத்து விடும் என்று தான் தெரிகிறது.

இதையும் படிங்க: நீ சரியான பழைய சரக்கு!.. நயன்தாராவை பார்த்து இப்படி சொன்னது யாரு தெரியுமா?.. வைரலாகும் போஸ்ட்!..

ஆனால், இந்த விஜய்க்கு எதுக்குப்பா டீ ஏஜிங் அவரே இளமையாத்தானே இருக்காரே என ரசிகர்கள் சிஜி செய்யாமலே இப்படியே விஜய்யை நடிக்க வைத்தாலே படம் பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கவிடும் என்கின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள நடிகர் விஜய் 2 கோடி உறுப்பினர்களை தமிழ்நாடு முழுவதும் தனது தமிழக வெற்றிக் கழகம் சேர்க்க வேண்டும் என்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: பாதி கிழிஞ்ச பனியனில் அழகை காட்டும் ஷிவானி நாராயணன்!.. நீ வந்தாலே மஜாதான்!..

இந்நிலையில், வீடியோ மூலம் எப்படி உறுப்பினராக சேர்வது என அறிவித்து லிங்க் கொடுத்திருந்தார் விஜய். அவருடைய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வந்தால் எப்படி யூடியூப் திணறிவிடுமோ அதே போல அந்த செயலியில் ரசிகர்கள் உறுப்பினராக சேர முண்டியடித்த நிலையில், அந்த செயலி தற்காலிகமாக ஜாமாகி முடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Related Articles

Next Story