ரியல் போலிஸுக்கே டஃப் கொடுத்த விஜயகாந்த்! காவல்துறை அதிகாரியாக பட்டைய கிளப்பிய படங்கள்

Published on: December 29, 2023
kanth
---Advertisement---

Actor Vijayakanth: சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பெரும் ஆளுமையாக இருந்தவர் விஜயகாந்த். இன்று மட்டும் விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருந்து உயிரோடு இருந்திருந்தால் அரசியலில் பெரும் சக்தியாக இருந்திருப்பார் என ரஜினி இன்று அஞ்சலி செலுத்த வரும் போது கூறியிருந்தார்.

ஆனால் அதுதான் உண்மை. அதற்குள் இயற்கை வேலையை காட்டிவிட்டது. 71 வயதில் தன்னுடைய மரணத்தை தழுவியிருக்கிறார் விஜயகாந்த்.எத்தனையோ கெட்டப்களில் விஜயகாந்த் நடித்திருந்தாலும் அவருக்கு கச்சிதமாக பொருந்திய கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரம்தான்.

இதையும் படிங்க: வாழ்ந்தவர் கோடி.. என்றும் மனதில் இருப்பார் விஜயகாந்த்!.. கண்கலங்கி அஞ்சலி செலுத்திய ரஜினி….

ரியல் போலீஸ்களே இந்தளவுக்கு இருப்பார்களா என்று தெரியவில்லை. விஜயகாந்தின் போலீஸ் கெட்டப்பை பார்த்து ஒரு சில ரியல் போலீஸ்கள் இன்ஸ்பிரேஷன் கூட ஆகியிருக்கலாம். அந்தளவுக்கு கண்கள் சிவக்க, உணர்ச்சி பொங்க அவர் பேசும் வசனங்கள் தியேட்டரில் விசில் பறக்க வைத்தது.

அந்த வகையில் விஜயகாந்த் போலீஸ் கெட்டப்பில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் என்னென்ன என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம். ரங்கராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்த படம்தான் ‘தர்மம் வெல்லும்’. பாக்ஸ் ஆபிஸில் சராசரி வெற்றியை பெற்றாலும் இந்தப் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார் கேப்டன்.

இதையும் படிங்க: அந்தப் படத்திற்காக வழிவிடும் தனுஷ்! அப்போ பொங்கல் ரிலீஸ் இல்லையா? கேப்டன் மில்லரின் நிலைமை?

‘மாநகர காவல்’ திரைப்படம். இந்திய பிரதமரை தீவிர வாதிகளின் சதித்திட்டத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் இந்தப் படத்தில் நடித்திருப்பார். விஜயகாந்தின் 100வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படத்தின் மூலம் தான் மன்சூர் அலிகான் அறிமுகமானார். விஜயகாந்திற்கு ஒரு திருப்பு முனையாக இந்தப் படம் அமைந்தது.

இப்படி வீரம் வெளஞ்ச மண்ணு, சேதுபதி ஐபிஎஸ், சத்ரியன், தாய்மொழி, ஆனஸ்ட் ராஜ், வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக குடியேறினார் விஜயகாந்த்.

இதையும் படிங்க:எம்ஜிஆர் மீது எந்தளவு பற்று கொண்டவர் கேப்டன்! அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் இதோ

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.