உங்களை பாத்தாலே பயமா இருக்கு!.. கேப்டன் விஜயகாந்தே பயந்த நடிகை யார் தெரியுமா?....

by சிவா |
vijayakanth
X

விஜயகாந்த் என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால், சிலரை பார்த்து விஜயகாந்தும் பயப்பட்டிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மிகவும் அடக்கி வாசித்தார். ஏனெனில், முதலில் படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

வாய்ப்பு கிடைத்தாலும் அது வெற்றிப்படமாக அமைய வேண்டும். முன்னணியில் இருக்கும் நடிகைகள் நம்முடன் நடிக்க வேண்டும். நமது படம் நன்றாக ஓடினால்தான் தயாரிப்பாளர்கள் நம்மை தேடி வருவார்கள்.. இதுவெல்லாம் நடக்குமா? என்கிற கலக்கம் விஜயகாந்துக்கு இருந்தது. பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க: நண்பர் பெயரில் பல கோடி சொத்து!.. விஜயகாந்த் செய்த தரமான சம்பவம்!.. அவ்வளவு நம்பிக்கையா?!..

அவர் நினைத்தது போலவே துவக்கத்தில் அவர் நடித்த படங்கள் ஓடவில்லை. யாரேனும் ஒரு தயாரிப்பாளர் விஜயகாந்தை வைத்து படமெடுக்க முன்வந்தாலும் ‘அவனெல்லாம் வேண்டாம். கருப்பாக இருக்கிறான். இந்த நடிகரை போட்டு படம் எடுங்கள்’ என அதை கெடுத்துவிட பலரும் இருந்தார்கள்.

எஸ்.ஏ.சி இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் விஜயகாந்த் நடித்தபோது கூட ‘ஒரு தலை ராகம்’ பட ஹீரோ அந்த வாய்ப்பை தட்டிப்பறிக்க முயன்றார். ஆனால், ஒரு தமிழன்தான் ஹீரோ என தயாரிப்பாளர் சொன்னதால் விஜயகாந்த் நடித்தார். அந்த படம் ஹிட் ஆனாலும் அதன்பின் விஜயகாந்த் நடித்த படங்கள் ஓடவில்லை.

இதையும் படிங்க: கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டிஷன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

விஜயகாந்துடன் நடிக்க மாட்டோம் என அப்போது பீக்கில் இருந்த நடிகைகள் சொல்லிவிட்டனர். எனவே, புதுமுகங்களுடன் நடித்தார் விஜயகாந்த். சாட்சி என்கிற படம் ஹிட் அடித்த பின்னரே ஓரளவுக்கு வாய்ப்புகள் வந்தது. 80களில் பெரிய நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. இவரும் விஜயகாந்துடன் நடிக்க சம்மதிக்கவில்லை.

Sripriya

Sripriya

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகை வடிவுக்கரசி ‘என்னுடன் நல்ல நட்புடன் பழகியவர் ஸ்ரீபிரியா. என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு உண்டு. பார்ப்பதற்குதான் அவர் டெரராக தெரிவார். ஆனால், மிகவும் தன்மையுடன் பேசுவார். ஆனால், நானும், ஸ்ரீபிரியாவும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் விஜயகாந்த் என்னிடம் ‘உங்களையெல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு’ என சொல்லுவார்’ என கூறியிருந்தார்.

Next Story