எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த வேலை... கோபத்தில் வீட்டுக்கே போய் சண்டை போட்ட விஜயகாந்த்...

by சிவா |   ( Updated:2024-01-07 07:12:05  )
sac
X

sac

Vijayakanth: விஜயகாந்த் என்றாலே எளிதாக கோபப்பட்டு விடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என சொல்வது விஜயகாந்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தன்னுடன் வேலை செய்பவர்கள் கோபத்தில் திட்டி விட்டாலோ, அடித்து விட்டாலோ கொஞ்ச நேரத்தில் மாறிவிடுவார்.

உடனே, அடிவாங்கியவருக்கு சிக்கன், மட்டன், மீன் என பல வகையான சாப்பாடுகள் கிடைக்கும். இதுதான் அவரின் குணம். ஊடகங்கள் அவரை பற்றி தவறாக விமர்சித்து அவர் மீது ஒரு தவறான இமேஜை உருவாக்கிவிட்டனர். ஆனால், உண்மையில் அவர் அப்படியெல்லாம் இல்லை என்பது அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.+

இதையும் படிங்க: சர்ஜரிக்கு பிறகு அத பண்ணல.. இத செஞ்சிருந்தா நல்லா இருந்திருப்பார் – கேப்டன் குறித்து SAC உருக்கம்

திரையுலகில் தனக்கு உதவியவர்களுக்கு நன்றியோடு இருப்பது என்பதை எல்லோரும் செய்யமாட்டார்கள். ஆனால், விஜயகாந்த் இதில் விதிவிலக்கு. தனக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தவர்களுக்கு கடைசி வரை உதவி செய்து வந்தார். விஜயராஜ் என்கிற பெயரில் அவர் சினிமாவில் வாய்ப்பு தேடியபோது நடிகர் குள்ளமணிதான் அவருக்கு உதவினார்.

அவர் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் விஜயகாந்தை அழைத்து சென்று ‘இவர் பெயர் விஜயராஜ். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது இவரின் ஆசை. இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என கேட்பாராம். அந்த நன்றி கடனுக்காகவே பின்னாளில் விஜயகாந்த் வளர்ந்த பின் அவர் நடிக்கும் பல திரைப்படங்களிலும் குள்ளமணியை நடிக்க வைப்பார்.

இதையும் படிங்க: இளையராஜா இசையில் அற்புதம்… அதிசயம்… ஒரே ராகத்தில் மாறுபட்ட இரு பாடல்கள்…!

அதேபோல், செலவுக்கு பணம் வேண்டும் என எப்போது வந்து அவர் நின்றாலும் உடனே 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ரூபாயை அவருக்கு கொடுத்து அனுப்புவாராம். விஜயகாந்தை ஹீரோவாக நடிக்க வைத்து ஹிட் கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்க்காக ஒரு படத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கேட்ட அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் செந்தூரப்பாண்டி.

இந்த படத்தில் விஜயகாந்த் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. எனவே, விஜயகாந்தின் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு இடத்தை அவரின் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து பத்திரத்தை பிரேமலதாவின் கையில் கொடுத்துவிட்டார் எஸ்.ஏ.சி. இதில் கோபமடைந்த விஜயகாந்த் எஸ்.ஏ.ஏ-சியிடம் போய் ‘எனக்கு நீங்கள் சம்பளம் கொடுக்கலாமா?’ என சண்டை போட்டுள்ளார். ‘நீ எனக்கு உதவினாய்.. நான் சம்பாதித்துவிட்டேன். உனக்கு திருப்பி செய்வது என் கடமை’ என சொல்லி அவரை சமாதனப்படுத்தினாராம் எஸ்.ஏ.சி.

இதையும் படிங்க: தனுஷ் ரொம்ப வற்புறுத்தி அந்தப் படத்தை பண்ண வச்சார்! ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா?

Next Story