Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு மனிதாபிமானம் மிக்க மனிதராக நடிகராக இருந்து வாழ்ந்தவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். அடுத்தபடியாக மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட நடிகராகவும் இருந்தவர். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து ஒரு உச்ச நடிகராக இந்த தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சினிமாவில் இவருக்கு என ஒரு தனி மரியாதை இருக்கிறது.
அதைப்போல தனது அரசியலிலும் இவரை போல ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது. எதிர்கட்சி தலைவராக இருந்து பலமுறை மக்கள் நலனுக்காக பாடுபட்டவர். அவரைப் பற்றி ஏராளமான பல செய்திகள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் பரணி விஜயகாந்த் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோபியை அழுகவிடும் ராதிகா மற்றும் ஈஸ்வரி… திடீரென தடம் மாறும் ஜெனி… என்ன அடுத்த பிரச்னையா?
ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்து என்ற பாடல் மிகப் பிரபலமான பாடலாகும். அதை விஜய் அவருடைய சொந்த குரலில் பாடி இருப்பார். அதை ஒரு சமயம் விஜயகாந்த் அவருடைய பேஸ் வாய்ஸில் பாடி காண்பித்தாராம் .அது மிகவும் நன்றாக இருந்தது. அப்பொழுது பரணி விஜயகாந்தை வைத்து எப்படியாவது ஒரு பாடலை பாட வைக்க வேண்டும் என நினைத்தாராம்.
ஆனால் அது முடியாமல் போய்விட்டது என மிகவும் வருத்தத்துடன் கூறினார். மேலும் பரணி அவருடைய திருமண அழைப்பிதழை விஜயகாந்திற்கு வைப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது விஜயகாந்த் அங்கு இல்லையாம். அதனால் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்து விட்டாராம். திருமணம் எல்லாம் முடிந்து ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் பரணியும் அவருடைய மனைவியும் ஏதோ ஒரு பாடல் காட்சிக்காக அங்கு இருக்க அதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் நேராக அந்த ரெக்கார்டிங் தியேட்டருக்கே போய்விட்டாராம்.
இதையும் படிங்க: மனோஜ் மற்றும் ரோகிணியை கடையை திறந்தாச்சு… கடுப்பில் ரசிகர்கள்… இதெல்லாம் தேவையே இல்லாத ஆணிதான்!
நேராக பரணியின் மனைவியின் கையை பிடித்துக் கொண்டு தயவுசெய்து என்னை மன்னித்துவிடுமா. உங்கள் திருமணத்திற்கு என்னால் வர முடியவில்லை என இருவரிடமும் மன்னிப்பு தெரிவித்துவிட்டு சென்றாராம். இப்படி ஒரு நல்ல மனிதரை மிகவும் இயல்பான ஒரு மனிதரை நான் இதுவரை இந்த சினிமாவில் பார்த்ததில்லை என பரணி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…