Connect with us

Cinema News

கோபியை அழுகவிடும் ராதிகா மற்றும் ஈஸ்வரி… திடீரென தடம் மாறும் ஜெனி… என்ன அடுத்த பிரச்னையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் பாக்கியா வீட்டின் கிச்சனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். காய் கட் செய்வது, சிக்கன் மசாலா பிசைந்து வைக்கிறது என எல்லா வேலைகளையும் அமிர்தாவிடம் கொடுக்கிறார் பாக்கியா. இதை பார்க்கும் ஜெனி எனக்கு ஏன் எந்த வேலையும் கொடுக்க மாட்டீங்க என்கிறார்.

காயை நீங்களே கட் செய்யுங்கள் என ஜெனியிடம் கொடுக்கிறார் அமிர்தா. ஜெனி ஒவ்வொரு காயாக பொறுமையாக கட் செய்து கொண்டிருப்பதை பார்க்கும் செல்வி நாளைக்கு சமைக்கிறதுக்கு, நீங்க கட் பண்றத பாத்தா இன்னும் நாலு நாள் ஆகும் போல இருக்கு எனக்கு கலாய்க்கிறார்.  எனக்கு கட் செய்ய தெரியாதுன்னு சொல்றீங்களா என ஜெனி கேட்க அதான உண்மை என்கிறார் செல்வி.

இதையும் படிங்க: சூரி மாதிரி இல்லை!.. எப்பவுமே பிரபாஸ் சீனியர் நடிகர்களை எப்படி மதிக்கிறாரு பாருங்க!..

இதனால் ஜெனி கோபித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்று விடுகிறார்.கமலா மற்றும் ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். எழில மட்டும் குழந்தை பெத்துக்க சொல்றாங்க உன் மாமியார் எனக் கமலா கூற அப்போ அங்கு வருகிறார் ஈஸ்வரி. நான் பேசுனது ஒட்டு கேட்டியா என திட்ட நீங்க பேசினது ஊருக்கே கேட்டுச்சு என்கிறார் கமலா.

 மூவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் கோபி இதை பார்த்து ஷாக் ஆகிவிடுகிறார். உடனே கமலா இவங்க பண்றது எல்லாமே ஆக்டிங். காலையில் கூட மயக்கம் அடிச்சு விழுகல கோபி அதை நம்பாமல் திட்டிவிட்டு செல்கிறார். இதையடுத்து வீட்டில் எழில் எல்லோருக்கும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போ செல்வி எனக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க எனக்கு கேட்க, உங்களுக்கு நடிக்க தெரியாது என ஜெனி கூறுகிறார். யாருக்கு தெரியாதுன்னு சொன்ன நான் எப்படி சூப்பரா நடிப்பேன் தெரியுமா? எனக்கூறி வீரபாண்டியன் கேரக்டரை செய்ய அந்த நேரத்தில் சரியாக செழியன் வீட்டிற்குள் வருகிறார். செல்வியை கலாய்த்து விட்டு பின்னர் எழிலுக்கு வாழ்த்து சொல்கிறார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேட்டி கட்டி ஆடிய ஒரே நடிகர் இவர்தானாம்! இவ்ளோ வேடிக்கை நடந்துருக்கா?

 ராமமூர்த்தி ரூமில் இருந்து வெளியே வர எப்படி இருக்கீங்க தாத்தா எனக் கேட்க அமிர்தா என்ன நல்லா பாத்துக்கிட்டாப்பா. இப்போ நல்லா இருக்கேன் எனக் கூற ஜெனி இதனால் கடுப்பாகிறார். அந்த நேரத்தில் பாக்கியா எல்லாரையும் சாப்பிட கூப்பிட நீங்க போங்க நான் குழந்தையை பார்க்க போறேன் என ஜெனி ரூமிற்க்கு சென்று விடுகிறார். குழந்தையுடன் அவர் ரூமில் இருக்க அவரை பாக்கியா பார்க்க வருகிறார்.

 அமிர்தாக்கு வீட்டு வேலையில எல்லாம் பழக்கம் இருக்கு. உனக்கு அப்படி இல்ல. வீட்டு வேலை எல்லாம் தெரியாம இருக்கவே நல்லது. தெரிஞ்சுகிட்டா கடைசி வரை இதுல சிக்க வச்சிடுவாங்க.  ஏதோ லோன் போடறதுக்கோ, ரெஸ்டாரண்ட் சம்பந்தப்பட்ட டாகுமெண்டுக்கோ கண்டிப்பா உன்ன தேடி வருவேன் என சமாதானம் செய்கிறார்.

 கோபி வீட்டில் தன்னுடைய ரூமுக்கு செல்ல ராதிகா கோவமாக இருக்கிறார். அதை பார்த்து ஜெர்க் ஆகும்போது பயந்து கொண்டே ரூமுக்குள் செல்கிறார். நீங்க மத்தியானம் எப்படி பேசினீங்க. நான் பேசுனது கூட கேட்கல. உங்க அம்மாவால தான் எல்லா பிரச்சினையும். நாளைக்கே உங்க வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க என ராதிகா கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது. 

இதையும் படிங்க: மனோஜ் மற்றும் ரோகிணியை கடையை திறந்தாச்சு… கடுப்பில் ரசிகர்கள்… இதெல்லாம் தேவையே இல்லாத ஆணிதான்!

google news
Continue Reading

More in Cinema News

To Top