ஏர்போர்ட்டில் சந்தித்த அவமானம்!.. அப்போது கேப்டன் விஜயகாந்த் எடுத்த அந்த முடிவு!..

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நுழைய முயற்சி செய்யும் போது மட்டுமல்ல. சொந்த வாழ்விலும் பல அவமானங்களை தாண்டித்தான் வளர்ந்தவர். மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பல முயற்சிகளை செய்தார். துவக்கத்தில் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
கிடைத்த வாய்ப்புகளையும் சிலர் பறித்துகொண்டனர். அதோடு, விஜயகாந்தோடு ஜோடி போட்டு நடிக்க அப்போதைய கதாநாயகிகள் முன்வரவில்லை. எனவே, அறிமுக நடிகைகள் மட்டுமே விஜயகாந்தோடு நடித்தனர். அல்லது சின்ன சின்ன நடிகர்கள் நடித்தார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் சட்டம் ஒரு விளையாட்டு படத்தில் நடித்து ஹிட் கொடுத்த போதும் அதே நிலைதான் நீடித்தது.
இதையும் படிங்க: 36 முறை மோதிய விஜயகாந்த் – சத்யராஜ் படங்கள் : ஜெயித்தது புரட்சிக்கலைஞரா? புரட்சித்தமிழனா?..
பல வெற்றிப்படங்களை கொடுத்த பின்னரே விஜயகாந்துடன் நடிக்க சில நடிகைகள் முன் வந்தனர். அப்படி சினிமாவில் வளர்ந்தவர்தான் விஜயகாந்த். பல அவமானங்களை சந்தித்ததாலோ என்னவோ.. அது மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடாது என நினைத்தார் விஜயகாந்த். எனவே, தன் வாழ்வில் எப்போதும் யாரையும் அவர் அவமானப்படுத்தியதே இல்லை.
அதோடு, வாய்ப்பு தேடி வந்த பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். பல புதிய நடிகர், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும்போதெல்லாம் அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தை நிரப்ப விஜயகாந்துக்கு தெரியாதாம்.
இதையும் படிங்க: அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.
எனவே, மற்றவர்களிடம் கொடுத்தே அதை நிரப்பி கொடுத்திருக்கிறார். மதுரையில் வசித்தபோது அப்பா தன்னை நல்ல பள்ளியில்தான் படிக்க வைத்தார். தான்தான் சரியாக படிக்காமல் விட்டுவிட்டோம் என வருந்திய விஜயகாந்த் படிக்க வழியில்லாமல் இருந்த பல ஏழை மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்தார்.
தான் நடத்தி வந்த கல்லூரியிலும் பல ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் கொடுத்திருக்கிறார். அதோடு, தன்னுடைய மகன்களை நன்றாக படிக்க வைத்தார். மேலும், எனக்கு ஆங்கிலம் தெரியாது என பல மேடைகளில் அவர் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.