Connect with us
ameer

Cinema History

கேப்டன் வீட்டில் அமீர்!. கோபத்தில் காபி-யை திருப்பி அனுப்பிய விஜயகாந்த்!.. நடந்தது இதுதான்!….

இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர் அமீர். எல்லாம் ஒரே ஊர்க்காரர்கள் மற்றும் நண்பர்கள். சேது படத்தில் பாலாவிடம் அமீரும், சசிக்குமாரும் வேலை செய்தார்கள். அதன்பின் பாலா அடுத்து இயக்கிய நந்தா படத்திலும் அமீர் வேலை செய்தார். அந்த படத்தில் சூர்யாவுக்கு எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தவர் அமீர்தான்.

அதன் தனது முதல் படமான ‘மௌனம் பேசியதே’ படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். அப்போதுதான் சிவக்குமார் குடும்பத்துடன் அமீருக்கு பழக்கம் ஏற்பட்டது. பருத்திவீரன் கதையை எழுதி அவர் சூர்யாவை நடிக்க வைக்க நினைத்தார். ஆனால், ‘எனது தம்பியை அறிமுகம் செய்து வையுங்கள்’ என சொல்லியது சூர்யாதான்.

இதையும் படிங்க: முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு!.. பிரபல நடிகையை விரட்டிய விஜயகாந்த்…

அப்படித்தான் அந்த படத்தில் கார்த்தி நடித்தார். அந்த படம் கார்த்திக்கு ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. ஆனால், இந்த படத்தின் மூலம் ஒன்றரை கோடி நஷ்டமடைந்தார் அமீர். படம் நன்றாக ஓடினாலும் அவருக்கு கொடுக்க வேண்டிய படத்தை ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை. இது தொடர்பான செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த படத்திற்கு பின் ஜெயம் ரவியை வைத்து ஆதி பகவான் என்கிற படத்தை இயக்கினார் அமீர். இந்த படம் நன்றாகவே இருந்தது. ஆனால், ஒருமாதிரி ராவாக இருந்ததால் இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. தற்போது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் அமீர் ஈடுபட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அமீர் விஜயகாந்துடனான தனது உறவு பற்றி பேசினார். ஒருமுறை அவரை சந்திக்க அவரின் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது வேலைக்கார பெண் ஒருவர் எனக்கு காபி கொண்டு வந்தார். கோபப்பட்ட கேப்டன் அவரை திருப்பி அனுப்பிவிட்டு அவரின் மனைவி பிரேமலதாவை காபி எடுத்து வர சொன்னார்.

அதோடு, பிரேமலதாவிடம் ‘இவர்தான் தம்பி அமீர். மதுரைக்காரர்’ என அறிமுகம் செய்து வைத்தார். இத்தனைக்கும் அவருடன் எனக்கு பழக்கமே கிடையாது. ஆனால், என்னை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். என்னை மிகவும் மரியாதையாக உபசரித்து அனுப்பி வைத்தார்’ என அமீர் சொல்லி இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top