Connect with us
vijayakanth

Cinema News

விஜயகாந்த் இறங்கி வருவார்.. விஜய் கார் கண்ணாடி ஏத்திட்டு போயிடுவார்!.. பத்திரிக்கையாளர் பேட்டி..

Vijayakanth: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து தனக்கென இரு இடத்தை பிடித்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் விஜயகாந்த். துவக்கம் முதலே ஹீரோவாக நடித்து மெல்ல மெல்ல முன்னேறியவர். 80,90களில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்த நடிகர் இவர்.

கிராமபுறங்களில் ரஜினியை விட அதிக ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் வைத்திருந்த நடிகர் இவர். அதனால்தான் ரஜினி படங்களை விஜயகாந்த் படங்கள் சி செண்டர்களில் அதிக வசூலை பெற்றது. சில சமயம் நகர்புறங்களிலும் ரஜினி படங்களை விட விஜயகாந்த் படங்கள் நல்ல வசூலை பெற்றது.

இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..

விஜயகாந்த் என்றாலே மிகவும் எளிமையானவர், எல்லோருக்கும் உதவி செய்வார், எங்கேயும் பந்த பண்ணமாட்டார். மிகவும் நல்ல மனிதர், எல்லோரையும் மதித்து நடத்துவார் என திரையுலகில் எல்லோரும் எப்போதும் சொல்வதுண்டு. திரையுலகில் விஜயகாந்தால் பலன் பெற்றவர் பலர்.

மேலும், திரையுலகை சேர்ந்த கஷ்டப்படும் பல கலைஞர்களுக்கு உணவளித்தவர் அவர். அதனால், அவர்கள் எப்போதும் விஜயகாந்தை நன்றியுணர்ச்சியுடன் நினைவு கூறுகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் ஒருவர் ‘2002ம் வருடம் கர்நாடக மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி மின்சார நிலையத்தில் அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் தலைப்பில் போராட்டம் நடைபெற்றது’.

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..

எனவே, நுங்கம்பாக்கத்தில் நடிகர்கள் எல்லோரும் ஒன்றாக ஓரிடத்தில் கூடியிருந்தனர். அங்கிருந்து எல்லோரும் புறப்பட தயாராக இருந்தனர். நான் பத்திரிக்கை துறைக்கு வந்து ஆறேழு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தது. விஜயகாந்த் அப்போது அங்கு வந்தார். அவரின் கார் உள்ளே செல்ல வழிவிட்டனர்.

ஆனால், என்னை பார்த்த அவர் முதலில் செய்தியாளர்களை உள்ளே விடுங்கள் என சொல்லி எங்களை உள்ளே அனுப்பிவிட்டு பின்னால் அவர் வந்தார். நடிகர்களில் விஜயகாந்த் மட்டுமே அப்படி இருக்க முடியும். விஜய் போன்ற நடிகர்கள் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு போய்விடுவார்கள். ஆனால், விஜயகாந்த் அப்படி அல்ல’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்தில் பொய் சொல்லி வசமாக சிக்கிய வீரபத்ரன்! வாங்கிய அடியை மறக்க முடியுமா?

 

google news
Continue Reading

More in Cinema News

To Top