கோட் படத்தில் இதுதான் விஜயகாந்தின் லுக்கா?!.. கேப்டன் செம க்யூட்டா இருக்காரே!....

#image_title
Goat Vijayakanth: ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என தனித்தனியாக ரசிகர்கள் இருந்தாலும் எல்லா ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகராக இருப்பவர் விஜயகாந்த். அதற்கு காரணம் அவரின் நல்ல குணங்களும், மற்றவர்களுக்கு அவர் செய்த உதவிகளும்தான்.

#image_title
அதனால்தான் அவர் இறந்தபோது தமிழ்நாடே அவருக்காக வருந்தியது. அவரின் இறுதி ஊர்வலத்தில் மேலே இருந்து பலரும் பூக்களை தூவினார்கள். இப்போதும் மக்கள் தினமும் அவரின் சமாதியில் போய் வழிபடுகிறார்கள். உடல்நிலை மட்டும் அவருக்கு ஒத்துழைத்திருந்தால் அரசியலிலும் ஒரு பெரிய இடத்தை பிடித்திருப்பார்.

#image_title
நடிகர்களுக்கும் பிடித்த நடிகராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அதற்கு காரணம் அவரிடமிருந்த மனிதாபிமானம்தான். எத்தனையோ பேருக்கு உணவழித்து சந்தோஷப்பட்டவர்தான் விஜயகாந்த். அவர் இறந்து 8 மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது அவரின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

#image_title
ஒருபக்கம் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ள கோட் படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் விஜயகாந்த் வருகிறார். அதாவது, ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காக பிரேமலதாவிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கிறார் வெங்கட்பிரபு.

#image_title
கோட் படத்தில் தீவிரவாத எதிர்ப்பு குழுவில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் வேலை செய்யும் போது அவர்களுக்கு சீனியர் அதிகாரி போல ஒரு காட்சியில் வருகிறாராம் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருந்ததோ அந்த தோற்றத்தில் கேப்டனை கொண்டுவந்திருக்கிறார்கள்.

#image_title
இந்நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தின் தோற்றம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து சிலர் ஏஐ மூலம் சில தோற்றங்களை உருவாக்கி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதேநேரம், இது படத்தில் வரும் தோற்றம் இல்லை. ஆனாலும், இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.