விஜயகாந்த் படத்துக்கு தேசிய விருது!.. ரிலீஸ் அன்றே இறந்த பிரபல நடிகர்.. என்ன படம் தெரியுமா?!...
மதுரையிலிருந்து சினிமா ஆசையில் சென்னை வந்தவர் விஜயகாந்த். பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டு போராடி சினிமா வாய்ப்பை பெற்றவர். துவக்கத்தில் சரியான படங்கள் இவருக்கு அமையவில்லை என்றாலும் அனைத்து படங்களிலும் ஹீரோவாக மட்டுமே நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் வெற்றி விஜயகாந்தின் மார்க்கெட்டை உயர்த்தியது.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறினார். ஒருகட்டத்தில் ரஜினி - கமலுக்கே டஃப் கொடுத்தார். ரஜினி, கமல் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூல் செய்த சம்பவங்களும் நடந்தது. ரஜினியை போலவே விஜயகாந்தும் ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதேநேரம் விஜயகாந்த் சிறந்த நடிகருக்காக அதிக விருதுகளையெல்லாம் அவர் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒரு படம் தேசிய விருதை பெற்ற சம்பவமும் நடந்தது. இது பலருக்கும் தெரியாது. விஜயகாந்த் சினிமா கேரியரில் அவர் நான்காவதாக நடித்து வெளியான திரைப்படம் ‘தூரத்து இடி முழக்கம்’. இந்த திரைப்படத்தை கே.விஜயன் என்பவர் இயக்கியிருந்தார். படம் உருவாகி 1979ம் வருடமே சென்சார் பெற்ற இந்த திரைப்படம் ஒரு வருடம் கழித்து 1981ம் வருட இறுதியில் வெளியானது.
ஒரு மீனவ கிராமத்தில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவானது. இந்த படம் விஜயகாந்துக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படம் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவான பனோரமாவில் திரையிடப்பட்டது. பல்வேறு விருதுகளையும் பெற்ற இந்த படம் தேசிய விருதையும் பெற்றது. இந்த படத்தில் நடித்திருந்த சுருளிராஜன் பட ரிலீஸ் அன்றே இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேப்டனுக்கு பிறகு அஜித்தை கொண்டாடப்போகும் மதுரை மக்கள் – என்ன விஷயம் தெரியுமா?