விஜயகாந்த் சட்டையை ரகசியமாக போட்டு அழகு பார்த்த உதவியாளர்! கேப்டன் செஞ்ச விஷயம்

by Rohini |   ( Updated:2024-08-25 06:59:40  )
viji
X

viji

Vijayakanth: இன்று கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள். அவர் இறந்த பிறகு இன்று வரை அவருடைய சமாதிக்கு ஆயிரக்கணக்கான பேர் வந்து அவரை பார்த்துவிட்டு செல்கின்றனர். பிறந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் எனும் எம்ஜிஆரின் பாடலுக்கு ஏற்ப அது விஜயகாந்த் விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது. அதுவும் இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால் கோயம்பேட்டில் இருக்கும் அவருடைய சமாதிக்கு வழக்கத்திற்கும் மாறாக ஏராளமான பேர் வந்து கொண்டிருக்கின்றனர்.

நாள்தோறும் அங்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது .அவருடைய ஆசையே அதுதான். சினிமா துறைக்கு வந்ததிலிருந்து அவருடைய அலுவலகத்திலும் சரி அவருடைய படப்பிடிப்பு செட்டிலும் சரி வயிறார சாப்பிட வைத்து அழகு பார்ப்பார் விஜயகாந்த். தான் என்ன சாப்பிடுகிறேனோ அதைத்தான் யூனிட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

இதையும் படிங்க: கொட்டுக்காளி வசூலை அள்ளியதா? படத்தின் கிளைமாக்ஸால் பின்னடைவா?

அதைப்போல அவர் இறந்ததிலிருந்து இன்று வரை அவருடைய சமாதியில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் விஜயகாந்த் பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவத்தை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். பெரியண்ணா படத்தை எடுத்த சுப்பையா ஆரம்பத்தில் ரோகினி தியேட்டரில் ஒரு ஆபீஸ் பாயாக டீ கொடுக்கும் ஒரு பாயாக இருந்தவராம்.

ஒரு சமயம் ரோகினி தியேட்டருக்கு வந்த விஜயகாந்த் அங்கு அமர்ந்து கொண்டிருக்க அப்போது அங்கு ஆபீஸ் பாயாக இருந்த சுப்பையா விஜயகாந்த் அருகில் வந்து அவருடைய காலை அமுக்கிக் கொண்டிருந்தாராம். அதன் பிறகு அவரிடம் பேசி பழகி பின்னாளில் தனக்கே உதவியாளராக வைத்துக் கொண்டாராம் விஜய்காந்த்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் இருந்து சுப்பையாவை தன்னுடைய மேனேஜராகவும் ஆக்கிக் கொண்டாராம். விஜயகாந்தை பொருத்தவரைக்கும் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் தனக்கு உதவியாளராக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதைப்போல சுப்பையாவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து பெரியண்ணா படத்தில் அவருக்காக நடித்து கொடுத்து தயாரிப்பாளர் ஆக்கினார் விஜயகாந்த்.

இதையும் படிங்க: இவ்ளோ பேர் பாராட்டியும் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?!.. வாழை படத்தின் இரண்டு நாள் வசூல்!…

அந்த படத்தில் சம்பளமே வாங்கவில்லையாம். பெரியண்ணா படத்தை சந்திரசேகர் இயக்கியிருந்தார். படம் நல்ல ஒரு லாபத்தை சுப்பையாவிற்கு பெற்றுக் கொடுத்தது. விஜயகாந்திடம் சுப்பையா உதவியாளராக இருந்தபோது விஜயகாந்தின் ஒரு கதர் சட்டையை போட்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாராம் சுப்பையா.

periyanna

periyanna

அந்த நேரத்தில் விஜயகாந்த் பெரும்பாலும் கதர் சட்டை தான் போடுவாராம். இவர் சட்டையை போட்டு பார்த்துக் கொண்டிருக்கும்போது அதை மறைமுகமாக விஜயகாந்த் பார்த்து விட்டாராம். விஜயகாந்த் வருவதை அறிந்ததும் சுப்பையா அந்த சட்டையை கழட்டி அருகில் இருந்த ஆங்கிளில் மாட்டி விட்டாராம் .

அதன் பிறகு விஜயகாந்த் தன் காஸ்டியூம் டிசைனர் ராஜுவை அழைத்து இதே மாதிரியான ஒரு 15 கதர் சட்டை வேட்டி வாங்கி சுப்பையாவிடம் கொடு என சொன்னாராம். இதைக் கேட்டதும் சுப்பையாவிற்கு ஒரே ஆச்சரியமாம். இப்படியும் ஒரு மனுஷனா என நினைத்து பெருமிதம் கொண்டாராம் சுப்பையா.

இதையும் படிங்க: படக்குழுவே சொல்லாத அப்டேட்! கோட் பட சீக்ரெட்டை இப்படி உடைச்சிட்டாரே மீசை ராஜேந்திரன்

Next Story