Connect with us
meeesai

Cinema News

படக்குழுவே சொல்லாத அப்டேட்! கோட் பட சீக்ரெட்டை இப்படி உடைச்சிட்டாரே மீசை ராஜேந்திரன்

Goat Movi:விஜயின் நடிப்பில் அடுத்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படமாகவும் விஜயின் சினிமா கரியரில் ஒரு வித்தியாசமான படமாகவும் அமையும் என்று சொல்லப்படுகிறது. அப்பா மகன் என இரு கேரக்டர்களில் நடிக்கும் விஜய், மகன் கேரக்டருக்காக அவருக்கு டீ ஏஜிங் டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் படம் ஒரு பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. ஏற்கனவே அஜித்துக்கு மங்காத்தா என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கு அந்த மாதிரி ஒரு ஹிட் கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதுவும் விஜயின் அரசியல் வேலை ஒருபுறம் தீவிரம் அடைய இந்த படத்தின் மீதும் அனைவரின் கவனம் திரும்பி இருக்கிறது.

இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு வரமுடியாமல் போன ஸ்ரீபிரியா! பதிலுக்கு இயக்குனர் கொடுத்த பரிசு

படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மோகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் டிரைலர் ஒரு பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

விஜயின் முந்தைய கால படங்களின் சில மேனரிசம் இந்த படத்தில் இருப்பதாக தெரிகிறது. அதை நல்ல முறையில் வெங்கட் பிரபு பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மேலும் இந்த படத்தில் வேறு சில முக்கிய பிரபலங்கள் நடிப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியது. ஆனால் டிரெய்லரில் அந்த மாதிரி எதுவுமே தெரியவில்லை.

இதையும் படிங்க: ஹரிஷ் ஜெயராஜால் தூக்கப்பட்ட பிரபல நடிகை… ஓகே ஓகே படத்தில் இதெல்லாம் நடந்து இருக்கா?

திரிஷாவை பற்றி கேட்டபோது வெங்கட் பிரபு அப்படியா என அவருக்கே தெரியாது போல பதில் கொடுத்தார். இப்படி இருக்க சமீபத்திய ஒரு பேட்டியில் மீசை ராஜேந்திரன் அசால்டாக யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்பதை சர்வ சாதாரணமாக சொல்லி இருக்கிறார்.

திரிஷா கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கிறார். எங்களுக்கு வந்த தகவலின் படி திரிஷா கண்டிப்பாக இருப்பார் என மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார். அதுபோல தல தோனியும் இந்த படத்தில் வருகிறார். ஆனால் அவருடைய ஒரு சின்ன வீடியோ வருகிறதா அல்லது அவரே நடித்திருக்கிறாரா என்பதை பார்த்தால் தெரியும்.

இதையும் படிங்க: குணா மாதிரி படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி… சிரிப்பாய் சிரித்த இயக்குனர்

மேலும் சிவகார்த்திகேயனும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என உறுதியாக கூறியிருக்கிறார் மீசை ராஜேந்திரன். இவர் கூறும்போது தொகுப்பாளர்  ‘என்ன இப்படி ஒரு பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக சொல்லிட்டீங்க?’ எனக் கேட்டபோது  ‘இதில் என்ன இருக்கிறது? எங்களுக்கு வந்த தகவல் இது. அதனால் சொல்கிறேன்’ என கூறினார் மீசை ராஜேந்திரன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top