குணா மாதிரி படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி... சிரிப்பாய் சிரித்த இயக்குனர்

rajni
தமிழ்த்திரை உலகில் உலகநாயகன் கமல்ஹாசன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று பல படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்களைப் பொருத்தவரை எல்லாமே ரசிக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு படம் தான் குணா.
இந்தப் படம் காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது. படம் வந்த புதிதில் அந்தளவுக்கு வரவேற்பு இல்லை. ஆனால் படம் வந்து இன்று வரை அந்தப்படத்தைப் பற்றிப் பேசாதவர்களே இருக்க முடியாது. சமீபத்தில் வந்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் கூட குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை தான்.
அந்த அளவு அப்போதே கமல் கொடைக்கானலில் துணிச்சலாக அப்படி ஒரு இடத்தை சூட்டிங் ஸ்பாட்டாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்தக் குகையில் கமல் டீம் தான் முதன் முதலில் சென்று படம் பிடித்துள்ளது. அதனால் தான் இந்தக் குகைக்கு 'குணா குகை' என்றே பெயர் வந்தது. படத்தில் கமலின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். படத்தின் இயக்குனர் சந்தானபாரதி. இவர் தற்போது சொன்ன ஒரு தகவல் சுவாரசியமாக இருந்தது. என்னன்னு பார்க்கலாமா...

santhana bharathi
சந்தானபாரதியிடம் ரஜினிகாந்த் ஆர்வமாகப் பேசுவாராம். ஒரு தடவை ஏன் பாரதி என்னை வச்சிப் படமே பண்ணலயே ஏன்னு கேட்டுள்ளார். சந்தர்ப்பம் வரலையே எப்படி பண்றது? சந்தர்ப்பம் வந்தா பண்ணுவேன்னு சொன்னாராம். ஏன் பாரதி குணா மாதிரி படம் பண்ண வேண்டியது தானேன்னு கேட்டுள்ளார். அதற்கு சந்தான பாரதி சொன்ன பதில் இது தான். இதற்கு கலகலவென சிரித்தபடி பதில் சொன்னது தான் விசேஷம்.
இதையும் படிங்க... வேட்டையன் கதை வேறலெவல்!.. ஆனா ரஜினிக்கு செட் ஆகுமா?!.. ஒரு அலசல்!…
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. அதுக்கான கதைகள் வரலைன்னு சொன்னேன். அதெல்லாம் சரி. நான் நடிச்ச படங்கள்லயே உனக்குப் பிடிச்ச படம் எதுன்னு கேட்டார். பாட்ஷா தான் சார்னு சொன்னேன். என்ன இத்தனை படம் பண்ணிருக்கேன். பாட்ஷான்னு சொல்றேன்னு கேட்டார். நீங்க நடிச்சதுலயே கமர்ஷியல் படங்கள்ல பெஸ்ட் படம் பாட்ஷா தான்னு சொன்னேன். அப்படியான்னு கேட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.