Cinema History
விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..
Vijayakanth: 80களில் தமிழ் சினிமாவில் நுழைந்து மெல்ல மெல்ல முன்னேறியவர் விஜயகாந்த். துவக்கத்தில் இவருடன் நடிக்க ரஜினியே மறுத்த சம்பவமெல்லாம் நடந்தது. ஒரு படத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிக்கு வில்லனாக கூட நடிக்க ஒப்புகொண்டார் விஜயகாந்த். ஆனால், அவரின் நண்பர் ராவுத்தர் திட்டியதால் அட்வான்ஸை திருப்பி கொடுத்தார்.
ஒருகட்டத்தில் ரஜினிக்கே போட்டியாக வந்தார் விஜயகாந்த். ரஜினியின் படங்கள் ஏ.பி.சி என சொல்லப்படும் மூன்று செண்டர்களிலும் நல்ல வசூலை பெறும் என்றாலும் பி, சி என சொல்லப்படும் சிறிய நகரம் மற்றும் கிராமப்புறங்களில் விஜயகாந்த் படங்கள் அதிக வசூலை பெறும். ரஜினி அவரின் படங்கள் வெளியாகும்போது ‘விஜயகாந்தின் படம் எதாவது வெளியாகிறதா?’ என கேட்பாராம் அந்த பயத்தைத்தான் விஜயகாந்த் தனது படங்கள் மூலம் உருவாக்கியிருந்தார்.
இதையும் படிங்க: அயலான் படத்தினை விஜயகாந்த் ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாதாம்!… என்ன நடந்துச்சு தெரியுமா?
பல வெள்ளி விழா படங்களை விஜயகாந்த் கொடுத்திருக்கிறார். அதுவும், ரஜினி, கமல் படங்களோடு வெளியாகும் விஜயகாந்த் படங்கள் அவர்களின் படங்களை விட அதிக வசூலை அள்ளிய சம்பவங்களும் பலமுறை நடந்திருக்கிறது. ஏனெனில், எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக விஜயகாந்த் இருந்தார் என்பதுதான் உண்மை.
விஜயகாந்த் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் அவர் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள் பற்றி பார்ப்போம். இதில் முதலிடத்தில் இருப்பது சின்னக் கவுண்டர் படம்தான். இந்த படம் 315 நாட்கள் ஓடியது. இப்படத்தோடு ரஜினியின் மன்னன் படம் வெளியானது. ஆனால், அந்த படம் இந்த அளவுக்கு ஓடவில்லை. அடுத்து விஜயகாந்தின் படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
கேப்டன் பிரபாகரன் – 300 நாட்கள்.
மாநகர காவல் – 230 நாட்கள்
புலன் விசாரணை – 220 நாட்கள்
ஊமை விழிகள் – 200 நாட்கள்
செந்தூரப்பூவே – 186 நாட்கள்.
பூந்தோட்ட காவல்காரன் – 180 நாட்கள்
அம்மன் கோவில் கிழக்காலே – 175 நாட்கள்.
வைதேகி காந்திருந்தாள் – 175 நாட்கள்
என் ஆசை மச்சான் – 175 நாட்கள்
பாட்டுக்கு ஒரு தலைவன் – 175 நாட்கள்.
வானத்தை போல – 175 நாட்கள்
சேதுபதி ஐபிஎஸ் – 150 நாட்கள்
ரமணா – 150 நாட்கள்
வல்லரசு – 112 நாட்கள்