Connect with us
vijayakanth

Cinema News

அவமானங்களை தாண்டி வளர்ந்த விஜயகாந்த்!.. கேலி செய்தவர்கள் முன் ஜெயித்து காட்டிய கேப்டன்…

Vijayakanth: மதுரையிலிருந்து சினிமா நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் நடிகர் விஜயகாந்த். விஜயராஜ் என்பது அவரின் நிஜப்பெயர். சினிமாவில் யாரையும் அவருக்கு தெரியாது. அவருக்கு உதவுவதற்கோ, வாய்ப்பு கொடுக்கவோ யாருமில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் வாய்ப்பு தேடினார்.

அப்போது பல அவமானங்களையும் அவர் சந்தித்திருக்கிறார். ‘நீயெல்லாம் சினிமாவுல நடிக்க ஆசைப்படுறியா?’ என அவரின் முகத்துக்கு நேராகவே பலரும் கேட்டனர். விஜயகாந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் கண்டிப்பாக சொந்த ஊருக்கு போய் தனது தொழிலை பார்த்திருப்பார்கள். ஆனால், அவமானங்களை தனது படிக்கெட்டாக மாற்றினார் விஜயகாந்த்.

vijayakanth

இனிக்கும் இளமை என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதுபற்றி ஒருமுறை ஊடகம் ஒன்றில் சொன்ன விஜயகாந்த் ‘அந்த பட இயக்குனர் காஜா எனது பெயரை விஜயகாந்த் என மாற்றினார். அந்த படம் வெளிவந்த பின்னர் என் பேர் வெளியே கொஞ்சம் தெரிந்தது. அதை வைத்து பல இயக்குனர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். எல்லோருமே ‘அதான் ரஜினிகாந்த் இருக்காரே. அப்புறம் நீ எதுக்கு விஜயகாந்துன்னு?’ கேட்பாங்க. அப்படி என்னை பார்த்து கேட்ட பல இயக்குனர்களின் இயக்கத்தில் பின்னாளில் நான் ஹீரோவாக நடித்தேன்’ என சொன்னார் விஜயகாந்த்.

இதுதான் தன்னை அவமானப்படுத்திய திரையுலகினருக்கு விஜயகாந்த் கொடுத்த பதிலடி. துவக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு சாப்பாடு கூட சரியாக கிடைக்காதாம். ஹீரோக்களுக்கு தரமான சாப்பாடும், மற்றவர்களுக்கு சாதாரண சாப்படும் கொடுக்கப்பட்டதை பார்த்து நாம் பெரிய நடிகராகும்போது ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அதை எல்லோருக்கும் போட வேண்டும் என நினைத்தார். அதை செய்தும் காட்டினார்.

vijayakanth

யாரெல்லாம் விஜயகாந்தை அவமானப்படுத்தி நிராகரித்தார்களோ அவர்கள் எல்லோரும் பின்னாளில் விஜயகாந்தின் கால்ஷீட்டுக்காக தவமிருந்தனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இப்போது மரணமடைந்துள்ளார். அவரது உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரின் நினைவுகள் என்றென்றும் எல்லோரின் மனதிலும் எப்போதும் நிறைந்திருக்கும்.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. அரசு மரியாதையும் அறிவிப்பு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top