ஆடியோ விழாவிற்கு தேதியை லாக் செய்த ‘லியோ- சூப்பர்ஸ்டார் சர்ச்சை பற்றி விஜயின் முடிவு இதுதானாம்!..

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைந்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

அவர்களுடன் சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் போன்ற பெரிய பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்திற்கான பிசினஸும் கோடி அளவில் விற்பனையாகின்றன.

இதையும் படிங்க : சைனிங் உடம்பு சும்மா அள்ளுது!.. பளபள மேனியை காட்டி பாடாப்படுத்தும் ஷிவானி!…

இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை எங்கு நடத்துவது என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக சென்னையிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர். அதுவும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் தான் விழாவை நடத்த இருக்கிறார்கள்.

செப்டம்பர் 30 ஆம் தேதி படக்குழு லாக் செய்திருக்கிறார்களாம். மேலும் அனைவரும் எதிர்பார்த்த விஷயம், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜயின் குட்டிக் கதையையும் தாண்டி ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏதாவது பேசுவாரா என்பதுதான்.

இதையும் படிங்க : 5 வருஷமா குப்பை கொட்டியும் கண்டுக்காத இளையராஜா – கைகொடுத்து தூக்கிய இசைப்புயல்

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு கண்டிப்பாக விஜய் இந்த இசை வெளியீட்டு விழாவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறிவந்தார்கள். ஆனால் விஜய் அதையெல்லாம் பொருட்படுத்தாது ரஜினியை பற்றி எதுவும் பேசக் கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை பற்றியும் ஜெய்லரில் ரஜினி பேசியதை பற்றியும் எதையும் பேசப்போவதில்லை என்ற முடிவை விஜய் எடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு சிலர் கூறிவருகிறார்கள். ஏனெனில் மாறி மாறி அணைந்து கிடக்கும் தீயை ஊதி ஊதி பெருசாக்குவதை விட அப்படியே கிடப்பில் போட்ட்டால்தான் அனைவருக்கும் நல்லது என்று சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: நடுத்தெருவில் நிர்கதியாக நிக்க வைத்தவர் மிஷ்கின்… வேறு ஒருவரா இருந்தால் நெஞ்சு வலியே வந்திருக்கும்! விஷால் தடாலடி!

 

Related Articles

Next Story