லைன் அப்பில் இத்தனை படங்கள்! இதுல பிக்பாஸ் வேற.. விஜய்சேதுபதி நீடிப்பாரா?

by Rohini |   ( Updated:2024-09-06 13:00:19  )
sethu 1
X

sethu 1

Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. ஆரம்பக் காலங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம்தான் விஜய்சேதுபதியை ஹீரோவாக அடையாளம் காட்டியது. சீனுராமச்சாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் விஜய்சேதுபதி. ஒரு கட்டத்தில் விஜய்,அஜித்துக்கு இணையான புகழை பெற்ற நடிகராகவும் உயர்ந்தார். அதுவும் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் இந்தளவு ஒரு வளர்ச்சியை அடைந்தார் என்றால் அவருடைய கடின உழைப்பும் சினிமாவில் அவர் வைத்திருந்த மரியாதையும் தான் காரணம்.

இதையும் படிங்க: கோட் முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… இதைத் தானே இவ்ளோ நேரமும் எதிர்பார்த்தோம்..!

ஹீரோவாகவே தன்னை நிலை நிறுத்திய விஜய்சேதுபதி பீக்கில் இருக்கும் போதே ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் புது அவதாரம் எடுத்தார். வில்லனாகவும் விஜய்சேதுபதியை மக்கள் வரவேற்க தொடங்கினார்கள். அதிலிருந்தே தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் ஜொலித்தார்.

வில்லனாக நடிக்க தொடங்கியதில் இருந்தே ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் சரிவர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வில்லை. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்சேதுபதி ஹீரோவாக மகாராஜா படத்தில் நடித்து அந்த படம் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொற்ப கோடிகள்தான் கோட் வசூல்… விஜய் கேரியரின் மோசமான ரெக்கார்ட்

100 கோடி கிளப்பிலும் இணைந்தது. மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்சேதுபதியின் லைன் அப்பில் அடுத்தடுத்து படம் பண்ண இயக்குனர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் நித்திலனும் மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.

கார்த்திக் சுப்பாராஜுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் விஜய்சேதுபதி. மேலும் அயலான் பட இயக்குனர் ரவிக்குமாருக்கும் படம் பண்ணுவதாக கூறியிருக்கிறாராம்.அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதிக்கு நெருங்கிய நண்பரும் இயக்குனருமான பாலாஜி தரணிதரனுக்கும் ஒரு படம் பண்ண போவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: கமலாவது அட்லீயாவது! எல்லாமே வெறும் வதந்தி.. வெளியான புது அப்டேட்

இப்போது இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். எப்படி அவருடைய நேரத்தை ஒதுக்கிட்டு இத்தனையையும் முடிக்க போகிறார் என்றே தெரியவில்லை என கோடம்பாக்கத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Next Story