போட்டி ஹீரோவின் படம் ஜெயிக்க வேண்டும் என வேண்டிய விஜய்சேதுபதி! அப்படி என்ன படம்?
தமிழ் சினிமாவில் தற்போது தன் 50வது படத்தின் மூலம் மீண்டும் மக்களின் ஆஸ்தான நடிகராக மாறியிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதி எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என நீண்ட வருடம் கடின உழைப்போடு காத்திருந்தார். அந்த உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் தான் இப்போது அவருக்கு கிடைத்த இந்த அந்தஸ்து.
இன்று ஒரு மாஸ் நடிகராக இருந்தாலும் மற்றவர்களிடம் அவர் பழகும் விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. யாரைப் பார்த்தாலும் தன் பக்கத்துவிட்டு காரர், சொந்தக்காரர்களை போல் கட்டியணைத்து அவர் காட்டும் அன்பு அனைவரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதனாலேயே விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று அழைக்கின்றனர்.
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான விஜய்சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான நடிகரான மாறினார். அவருக்கு என ஒரு தனி மாஸ் உருவானதும் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக மாறி மாஸ் காட்டினார். அந்தப் படத்திற்கு பிறகு சினிமாவில் விஜய் சேதுபதியின் புகழ் உயர்ந்தது.
தொடர்ந்து வில்லனாக மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக மகாராஜா படத்தில் ஒரு பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் விஜய் சேதுபதி ஒரு நடிகரின் படத்தை பற்றி கூறிய ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகின்றது.
அதாவது சிந்துபாத் படத்தை இயக்கிய அருண்குமார்தான் சித்தா படத்தையும் இயக்கியிருந்தார். அந்தப் படம் வெளிவரும் போது சித்தா படம் ஓடுமா? ஓடாதா என்ற பயம் விஜய்சேதுபதிக்கு இருந்ததாம். இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாராம்..
அவர் நினைத்ததை போல் சித்தா படத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். அதுவும் சிந்துபாத் படத்திற்கு பிறகு இயக்குனர் அருண் குமாருக்கு ஒரு வெற்றி கண்டிப்பாக தேவைப்பட்டது. அது அவனுக்கு கிடைத்தது. அதில் நடித்த குழந்தைகளும் அற்புதமாக நடித்தார்கள் என விஜய்சேதுபதி கூறியிருக்கிறார்.