தங்கலான் படத்தில் இருக்கும் மெகா சஸ்பென்ஸ்!.. அட சியான் கூட இத சொல்லலயே!...

by சிவா |   ( Updated:2024-08-12 14:12:18  )
Thangalan
X

Thangalan

Thangalan: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரம். அந்த படம் மூலம் சியான் விக்ரமாக மாறினார். அதோடு, தான் ஒரு சிறந்த நடிகர், நல்ல வாய்ப்பு கிடைத்தால் என் திறமையை நிரூபிப்பேன் எனவும் திரையுலகினருக்கு காட்டினார். இந்த படத்தின் வெற்றி விக்ரமுக்கு நிறைய பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

கலைப்படங்களின் காதலனாக இருந்தாலும் தில், தூள், சாமி என அதிரடி ஆக்‌ஷன் மசாலா படங்களில் நடித்து ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் ஒருபக்கம் காசி போன்ற படங்களில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அழவைத்தார்.

இதையும் படிங்க: கோட் – தங்கலான் படத்தை வச்சி கங்குவாவை ஹிட் அடிக்க பிளான்!. இது செம ஸ்கெட்ச்சா இருக்கே!..

நடிகர் கமலை போல விதவிதமான கதாபாத்திரங்களில் பல கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமுக்கு எப்போதும் உண்டு. இது அவர் நடிப்பில் வெளியான கோப்ரா மற்றும் ஐ படங்களை பார்த்தாலே புரியும். இந்த வரிசையில் மீண்டும் விக்ரம் எடுத்திருக்கும் அவதாரம்தான் தங்கலான்.

ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு பீரியட் படமாக உருவாகியிருக்கிறது. அதாவது, சுதந்திரம் பெறுவதற்கு முன் கர்நாடக தங்க சுரங்கத்தில் வேலை செய்து வந்த தமிழர்களை பற்றிய கதை இது. இந்த படத்தில் நீண்ட தலைமுடி, தாடி என வித்தியாசமான வேடத்தில் அசத்தி இருக்கிறார் விக்ரம்.

thangalan

இந்த படம் வருகிற 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒருபக்கம், இப்படத்தின் படக்குழு பல ஊர்களுக்கும் சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசி படத்திற்கு புரமோஷன் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தங்கலான் படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாராம். ஆனால், அதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது படக்குழு. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட விக்ரம் இதை சொல்லவில்லை. படம் பார்க்கும்போது ரசிகர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று நினைத்திருக்கிறாராம் ரஞ்சித்.

இதையும் படிங்க: விஜய் படத்துல கண்ணியம் இருக்கு! ஆனா அவர் படத்துல? ஐயோ வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போல

Next Story