அமிதாப்பச்சானிடம் பல்பு வாங்கிய சீயான்… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் செம போங்க!…

Actor Vikram: என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சீயான் விக்ரம். இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் பல இன்னல்களுக்கிடையே இன்று முன்னணி கதாநாயகனாக வலம் வந்துள்ளார். நடிப்பிற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.

இவரது நடிப்பிற்கும் இவரது வயதுக்கும் சம்பந்தமே இருக்காது. இந்த வயதிலும் கூட இவர் பல இளம் கதாநாயகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து கொண்டிருக்கிறார்.இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. வித்தியாசமான கதைகளை ஏற்று நடிக்க கூடியவர். காசி, அந்நியன், பிதாமகன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் வித்தியாசமான வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பெற்றவர்.

இதையும் வாசிங்க:விஜய் ஷாருக்கான விட இவர்தான் எனக்கு ரொம்ப முக்கியம்… என்னப்பா அட்லி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட!…

இவர் நடிப்பில் வெளியான தூள், சாமி போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தன. இவர் நடிப்பில் இம்மாதம் வெளிவரவுள்ள திரைப்படம்தான் துருவ நட்சத்திரம். இப்படத்தினை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பின் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம்தான் தங்கலான்.

இப்படத்திற்காக விக்ரம் மிக கஷ்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த டிரெய்லர் ரிலீஸ் விழாவில் பேசியிருந்தார். அந்த அளவு சினிமா மீது இவர் ஆர்வம் கொண்டுள்ளார். ஆனால் இவர் வாழ்வில் ஒரு முறை நடந்த சம்பவம் மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முறை இவர் டெல்லிக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

இதையும் வாசிங்க:தன் படத்தில் விஜய் படத்தை போட சொன்ன அஜித்!. இது புரியாம அடித்துக்கொள்ளும் ஃபேன்ஸ்..

அப்போது அந்த நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சான் வந்துள்ளார். அவரை பார்த்த விக்ரம் அவரிடம் பேசியுள்ளார். உடனே அமிதாப் பச்சான் ஹாய் என செல்லிவிட்டு சென்றுவிட்டாராம். உடனே விக்ரமுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டுள்ளது. ஆனால் அமிதாப் பச்சான் சிறிது தூரம் நடந்தபின் திரும்பி பார்த்து ‘ஹேய் மிஸ்டர்.. என்ன சொன்னீங்க?’ என கேட்டுள்ளார்.

உடனே விக்ரம் ‘நான்தான் விக்ரம்’ என் கூறினாராம். உடனே அமிதாப் பச்சான் விக்ரம் நடித்த படங்களை வரிசையாக கூறி அவரை மிகவும் புகழ்ந்தாராம். அதன்பின்தான் விக்ரமுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம்.

இதையும் வாசிங்க:சீட் கிடைக்காமல் அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு!.. மாப்பிளைக்கு அவ்வளவு வெறியா!..

 

Related Articles

Next Story