தாடியை எடுக்க முடியாமல் பெரிய படத்தை இழந்த விக்ரம்!.. இப்பவும் ஃபீல் பண்றாராம்!..

by சிவா |   ( Updated:2023-11-05 05:19:48  )
vikram
X

Actor Vikram: சினிமாவில் பல வருடங்கள் போராடி சின்ன சின்ன வேடங்களில் நடித்து சேது திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் விக்ரம். இவர் முதலில் நடித்தது ‘என் காதல் கண்மணி’ என்கிற படத்தில்தான். அடுத்து 60களில் பெரியஇயக்குனராக இருந்த ஸ்ரீதர் இயக்கத்தில் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்தார்.

ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை. அப்போதுதான் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கால் செயல் இழக்க வாய்ப்பு என மருத்துவர் எச்சரிக்க விக்ரமுக்கு 23 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. 3 வருடங்கள் படுக்கையில் இருந்தார்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கி 23 அறுவை சிகிச்சைகள்!.. 3 வருடம் படுக்கை!.. சாதித்து காட்டிய சியான் விக்ரம்!..

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் அப்பாஸ் போன்ற சில நடிகர்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்தார். சில வருடங்கள் வெறும் டப்பிங் கலைஞராக மட்டுமே இருந்தார். தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் மலையாள சினிமா பக்கம் சென்று மம்முட்டி, சுரேஷ் கோபி போன்ற நடிகர்களுக்கு தம்பியாக பல படங்களில் நடித்தார்.

அப்போதுதான் பாலாவின் இயக்கத்தில் சேது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த சரியான வாய்ப்பு என கணக்குப்போட்ட விக்ரம் அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் தில், தூள், சாமி என பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறினார்.

இதையும் படிங்க: லியோவால் தங்கலானுக்கு வந்த சோதனை!.. உழைப்பெல்லாம் வீணாப்போயிடுமா?!. அப்செட்டில் விக்ரம்…

வளரும் நேரத்தில் விக்ரம் பல நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளார். விக்ரமனின் இயக்கத்தில் புதிய மன்னர்கள் படத்தில் விக்ரம் நடித்துக்கொண்டிருந்த போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பம்பாய்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், தாடியை எடுக்கவேண்டும் என மணிரத்னம் சொல்லிவிட்டார். ஆனால், நாளைய மன்னர்கள் படம் முடியவில்லை. அப்படத்திற்காக தாடி வளர்ந்திருந்தார். எனவேதான், பம்பாய் படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன்பின் அந்த படத்தில் அரவிந்த்சாமி நடித்தார்.

ஆனால், பம்பாய் படத்தை பார்த்தபின் இந்த படத்தில் நடிக்காமல் போய் விட்டோமே என இப்போதும் விக்ரம் வருத்தப்படுவாராம். அதேநேரம், மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் விக்ரம் நடித்து தான் ஆசையை தீர்த்துகொண்டார்.

இதையும் படிங்க: எத்தன கோடி கொடுத்தாலும் வேண்டாம்!… ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சியான் விக்ரம்…

Next Story