'தங்கலான்' ரிலீசுக்கு பிறகு இந்த கேள்வியை அஜித்திடம் கேட்பீங்க.. தன்னுடைய ரசிகர் பலத்தை காட்டிய விக்ரம்

by Rohini |   ( Updated:11 Aug 2024 5:54 PM  )
ajithvikram
X

ajithvikram

Actor Vikram: உங்களுடைய ரசிகர் பலம் அவ்வளவுதானா என கேட்ட நிருபரை அன்பாக வெளுத்து வாங்கிய விக்ரம் குறித்த செய்திதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோலிவுட்டில் நடிகர் விக்ரமுக்கு என தன் ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் திரையுலகமே மதிக்கும் நடிகர்கள் மத்தியில் விக்ரம் ஒரு டாப் ஹீரோவாக இருக்கிறார்.

விதவிதமான கெட்டப்களை போட்டு நடிப்பதில் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம்தான் தலை சிறந்து விளங்குகிறார். நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு சேது திரைப்படம்தான் அவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதிலிருந்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவே மாறினார் விக்ரம்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 2 படம்!. அஜித் இப்படி வேலை பார்க்க காரணமே இதுதானாம்!.. பக்கா ஸ்கெட்ச்!..

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படமான தங்கலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. வரும் 15 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில்தான் தற்போது விக்ரம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தளவு தன்னுடைய படத்திற்காக எந்த நடிகரும் ப்ரோமோஷன் செய்ததே இல்லை என்று சொல்லலாம்.

அவரை பொறுத்தவரைக்கும் ரசிகர்களோடு ரசிகராக இருந்து தன் படத்தை பற்றி ஜாலியாக பேசி கலந்தாலோசிக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் நினைத்ததை விட அந்த ப்ரோமோஷன் வேலைகள் சிறப்பாக நடந்து கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ப்ரோமோஷன் போன இடத்தில் விக்ரமிடம் நிருபர் ஒருவர் ‘ஒவ்வொரு முறையும் உங்களின் நடிப்பை சிறந்த முறையில் கொடுத்துதான் வருகிறீர்கள். இருந்தாலும் அஜித் , சூர்யாவிற்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போல் உங்களுக்கு இல்லையே?’ என கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: ரஜினி படத்தை இயக்கவிருந்த இளையராஜா!.. ஆனா நடக்காமே போச்சே!.. அட அந்த படமா?!…

அதற்கு விக்ரம் ‘என்னுடைய ரசிகர் பட்டாளத்தின் பலம் உங்களுக்கு தெரியவில்லை. தங்கலான் ரிலீஸ் சமயத்தில் தெரியும். மேலும் எனக்கு எல்லாருமேதான் ரசிகர்களாக இருக்கிறார்கள்’ என கூறியிருந்தார். விக்ரம் கூறும் போது அங்கிருந்த ஒருவர் குறுக்கிட்டு ‘குறுக்கிட்டு பேசுவதற்கு மன்னிக்கவும். அவர் சொன்ன நடிகர்களுக்கு ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள். ஆனால் என் தலைவன் விக்ரமுக்கு ஹேட்டர்ஸே கிடையாது’ என கூறினார்.

இதை கேட்டதும் விக்ரம் செண்டிமெண்டாக ஃபீல் பண்ணி அடுத்து அவரது பேச்சை தொடர்ந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த கேள்வி கேட்ட நிருபரை பார்த்து விக்ரம் ‘ நீங்கள் தியேட்டருக்கு வருவீங்கதானே. உங்கள் நம்பரை கொடுத்துட்டு போங்க. தங்கலான் ரிலீஸ் ஆன பிறகு நான் போன் பண்றேன். பின் இதே கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்பீர்கள் ஒரு நாள். அது நாளைக்கே கூட இருக்கலாம்’ என அஜித், சூர்யா குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் விக்ரம்.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன்..! கோட் படத்துக்காக அதை மட்டும் செஞ்சிடாதீங்க..!

Next Story