Connect with us
Vijay

Cinema News

ரசிகர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன்..! கோட் படத்துக்காக அதை மட்டும் செஞ்சிடாதீங்க..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்திற்காக 3 சிங்கிள்கள் வந்து விட்டன. யுவன் சங்கர் ராஜா விஜயின் புதிய கீதை படத்துக்குப் பிறகு இணைந்துள்ளார். பாடல்கள் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அடுத்து எப்போ கிளிம்ப்ஸ், எப்போ டிரைலர்னு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ஐமேக்ஸ் என்னும் பெரிய திரையரங்கில் கோட் படத்தைத் திரையிடப் போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம். கோட் படத்தில் சமீபத்தில் எப்பிக் கியு ஸ்டில் கொடுத்தார்கள். இதுவும் கியூப்போட தொழில்நுட்பம் தான். இதுல என்ன ஸ்பெஷல்னா இமேஜ், சவுண்டு இதை எல்லாம் மிக மிக துல்லியமாகக் காட்டும்.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த் எல்லாரும் கன்னை வச்சிக்கிட்டு நிக்கிற அந்த போஸ் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. அப்படி ஒரு வித்தியாசமான ஸ்டில். இதை ஏன் முதல்லயே விடலன்னு நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். இது தான் அப்டேட்.

GOAT

GOAT

நீங்க ஒரு புராடக்டைத் தயார் பண்ணிட்டீங்கன்னா அதை மார்க்கெட் பண்றதுல பெரிய வித்தையே இருக்கு. அது பொருளாகவும் இருக்கலாம். படமாகவும் இருக்கலாம். அந்த வித்தை காலாகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு சூட்சமத்தைக் கையாண்டுள்ளது.  அதே போல கோட் பட கிளிம்ப்ஸ் வீடியோ 15ம் தேதி வரும். 24 அல்லது 25ம் தேதியில் டிரைலர் வரும்.

மாநாடுக்குப் பிறகு விஜய் என்ற பெரிய நடிகரை வைத்து வெங்கட்பிரபு படத்தை இயக்கி உள்ளதால் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து வருகின்றனர். செப்டம்பர் 5ம் தேதி படம் ரிலீஸாகிறது. தமிழக அரசு படத்திற்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்குமா? கொடுக்காதா என பரவலாகப் பேசப்படுகிறது.

அப்படி கொடுக்காதபட்சத்தில் பெங்களூருக்கும், ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் பெரும் கூட்டம் படையெடுப்பார்கள் என்பது நிச்சயம். ‘இந்தப் படத்திற்காக என்னுடைய தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை எங்கும் கொண்டு வராதீங்க’ன்னு ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறார் விஜய்.

மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top