எங்களுக்கு கோமணம்… அவருக்கு மட்டும் ஷாட்ர்ட்ஸா?… இயக்குனரை வெளுத்து வாங்கிய விக்ரம்…

by amutha raja |
thangalaan
X

Actor vikram: விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழை தவிர மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பின் இவர் தில், சேது, தூள் போன்ற பல திரைப்படங்களின் மூலம் சினிமாவின் ஜொலிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான கதைகளை ஏற்று நடிப்பதில் வல்லவர். ஐ, அந்நியன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது வித்தியாசமான கதாப்பாத்திரத்தை மிகச்சிறப்பாக வெளிக்காட்டினார்.

இதையும் வாசிங்க:எனக்கு மட்டும் நான்-வெஜ், தொழிலாளர்களுக்கு வெறும் முட்டையா..? ஷூட்டிங்கில் மல்லுக்கு நின்ற எம்.ஜி.ஆர்..!

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உள்ளன. சாமி, பிதாமகன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது வெற்றியை நிலைநாட்டினார். தெய்வ திருமகள் திரைப்படத்தில் இவரின் நடிப்பை கண்டு மயங்காதவர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும். இத்திரைப்படத்தில் இவரது நடிப்பினை பார்ப்பவர்களுக்கு அழுகையே வந்துவிடும். அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டவர்.

பின் பீமா, ராஜபாட்டை போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இவர் தற்போது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகுந்த சிரமத்திற்கு பின் இப்படம் இந்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம்தான் தங்கலான். இத்திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியானதையடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகின்ற ஜனவரி26ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் வாசிங்க:காலையில் ப்ரோபோஸ் செய்தவருடன் மாலையில் திருமணம் செய்து கொண்ட ரஜினி மகள்… அட சுவாரஸ்யமால இருக்கு..!

மேலும் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம் இப்படத்தின் படபிடிப்பின்போது சிறிது நேரம் கூட யாரும் ஓய்வு எடுக்க முடியாது எனவும் மேலும் அந்த இடத்தில் காலை நேரத்தில் கடும் குளிர் நிலவியதாகவும் பின் சரியான வெயிலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தில் விக்ரமிற்கே கிட்டதட்ட 4 மணி நேரம் மேக்கப் போடுவார்களாம். மேலும் அந்த கடும் குளிரிலில் இயக்குனர் இவருக்கு கோமனம் கட்டிதான் நடிக்கவிட்டாராம். ஆனால் அவர் மட்டும் ஷார்ட்ஸ் போட்டு நடமாடுவார் என தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

அதனால் இயக்குனராய் இருப்பது வரம் தங்களை போன்ற அளவிற்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை என கூறியிருந்தார். ஆனால் என்னதான் தான் இவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும் மறுநாள் காலையில் எழும்பும்போது மிகவும் புத்துணர்வுடன் எழும்பி மறுநாள் ஷூட்டிங்கிற்கு செல்வார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:எட்டே படம்… கோடீஸ்வர அப்பா.. வெளியில் தெரியாத குடும்ப விவரம்… காணாமல் போன ஹீரோ..! ஆச்சரிய தகவல்..!

Next Story