தளபதியை பார்த்து புரட்சி தளபதிக்கு வந்த ஆசை!.. இது எங்க போய் முடியுமோ!..

Vijay: ரசிகர்களாலும், சினிமா உலகாலும் தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இளைய தளபதியாக இருந்தவர் ஒரு கட்டத்தில் தளபதியாக மாறினார். இவரின் படங்கள் வசூலை வாரிக்குவிக்கிறது. இவருக்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயராக இருக்கிறார்கள்.

இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஏற்கனவே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவ்வப்போது தனது அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசி வந்தார். விஜய் ரசிகர் மன்றங்கள் பல வருடங்களுக்கு முன்பே விஜய் மக்கள் இயக்கமாக மாறியது.

இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் கட்சி!.. ஒரே வார்த்தையில் சோலியை முடித்த வடிவேலு.. இப்படி சொல்லிட்டாரே!..

இந்நிலையில்தான், சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே தங்களின் இலக்கு எனவும் கூறியுள்ளார். அதோடு, தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் எனவும் அறிவித்திருக்கிறார். விஜயின் அரசியல் விவகாரம் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. விஜய்க்கு ஆதரவு பக்கம், எதிர்ப்பு ஒருபக்கம் என பலரும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும் அரசியல் கட்சி துவங்கும் ஆசை இருக்கிறதாம். ஏற்கனவே, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஷால். அதோடு நிற்காமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தபோது அதிலும் போட்டியிட முயன்றார்.

இதையும் படிங்க: தலைவர் 171ல் ரஜினிக்கு அந்த படத்தோட லுக்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் வைக்கும் லோகேஷ் கனகராஜ்..

ஆனால், அவரின் விண்ணப்பத்தில் பிழை இருந்ததாக கூறி அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், எப்போது மேடை ஏறினாலும் ‘மக்களுக்கு நான் இதை செய்வேன்..அதை செய்வேன்’ என பேசி வந்தார். மேலும், வெள்ளம், மழை போன்ற காலங்களில் மக்களுக்கு சின்ன சின்ன உதவிகளும் செய்து வந்தார்.

இப்போது விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்ட நிலையில் விரைவில் நாமும் கட்சி துவங்க வேண்டும் என யோசித்து வருகிறாராம் விஷால். தற்போது அவர் துப்பறிவாளன் 2 பட வேலையில் ஈடுபட்டு வருகிறார். எனவே, எப்போது அவர் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: சிம்ரன் செட் ஆகுமா?!. சந்தேகப்பட்ட விஜய்!.. ஆனா நடந்ததே வேற!.. ஹிட் படத்தில் நடந்த மேஜிக்!..

 

Related Articles

Next Story