இவரே ஒழுங்கில்ல... இன்னொரு நடிகருக்கு வாழ்வு கொடுக்கப்போறாரா?.. விஷாலை பொளந்து கட்டிய பிரபலம்

Vishal1
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளது. அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போதும் என்னா நடிப்பு என்றார்கள். அப்போது விஜயகாந்தோட மகன் சண்முகப்பாண்டியனுடன் நான் சினிமாவில் நடிக்கத் தயார் என்றார். இதே போல நடிகர் ராகவா லாரன்ஸ்சும் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... அந்த விஷயத்துல மாமனாருக்கு அப்படியே தலைகீழ் மருமகன்!… இப்படி எல்லாமா தனுஷ் செய்வாரு?
இதை எல்லாம் இப்போது ஏன் சொல்கிறார்கள் விஜயகாந்த் நல்ல நிலையில் இருக்கும்போதே சண்முக பாண்டியன் முதல் படத்தில் நடிக்கும்போதே சொல்லி இருக்கலாமே என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. சமூக வலைதளத்தில் பலரும் இதை நடிப்புடா சாமி என்றார்கள்.
விஷாலுக்கு என்னமோ மனதில் விஜயகாந்த்துன்னு நினைப்பு. அதனால் பலருக்கும் வாய்ப்பு கொடுப்பதாக எண்ணிக் கொள்கிறார். அந்தளவுக்கு அவர் இருப்பதில்லை என்பது அவருக்கே தெரியவில்லை என்ற பிரபல பிரபல சினிமா விமர்சகர் அந்தனன் இவரைப் பற்றி இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் தெரிவித்துள்ளார்.
மார்க் அண்டனி படத்தோட தயாரிப்பாளர் வினோத் ரொம்ப துயரப்பட்டதுக்கு காரணமே விஷால் தானாம். இவரால சூட்டிங் ரொம்பவே லேட்டாகுமாம். இப்படியே பல நாள்கள் நடந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வினோத் வந்து கிட்டத்தட்ட தர்ணாவே பண்ண ஆரம்பித்து விட்டாராம். உங்களால எனக்கு இவ்ளோ நஷ்டம்னு சொன்னாராம். இப்படியே தொடர் மன உளைச்சல் கொடுத்து தான் இந்தப் படத்தையே முடிச்சாங்களாம். அந்தப் படத்தோட வெற்றிவிழாவில் விஷால் பேசினது தான் ஹைலைட்...
வினோத் நீ நிறைய சம்பாதிச்சிட்டே... எல்லாத்தையும் எடுத்துட்டு நீ வெளிநாட்டுக்கு குடும்பத்தோட போய் ஹேப்பியா இரு. மூணு மாசம்னாலும் ஜாலியா இரு. இந்தப் படத்தால எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டே... அதனால உன்னோட மன உளைச்சல் எல்லாம் தீருற மாதிரி நீ அங்க போயிட்டு வா... ன்னு சொன்னாராம் விஷால்.
இதையும் படிங்க... இப்படி ஒரு கேள்வி.. ‘லால் சலாம்’ அரங்கத்தையே அதிர வைத்த அஜித்! விஷ்ணு விஷால் செய்த சம்பவம்
எல்லா கஷ்டமும் இவரால தான் வந்ததுன்னு தெரியாமலேயே இவரு இப்படி சொல்லிருக்கறது தான் வேடிக்கையான விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.