இந்த படமும் ஓடலன்னா தலையில துண்டுதான்!. இது என்னடா புரட்சி தளபதிக்கு வந்த சோதனை....
Actor Vishal : அப்பா தயாரிப்பாளர் என்பதால் சுலபமாக சினிமாவுக்கு வந்தவர் விஷால். அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சில படங்களில் வேலை செய்தார். அதன்பின் செல்லமே என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். திமிறு திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். இதில் லிங்குசாமியின் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சண்டக்கோழி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. அந்த காலகட்டத்தில் விஜய்க்கு போட்டியாக கூட விஷால் மாறினார். ஆனால், சொந்தமாக படங்களை தயாரிக்க துவங்கியது, அதனால் கடனில் சிக்கியது, தொடர் தோல்வி படங்களை கொடுப்பது என மார்க்கெட்டை இழந்தார்.
இதையும் படிங்க: நடுத்தெருவில் நிர்கதியாக நிக்க வைத்தவர் மிஷ்கின்… வேறு ஒருவரா இருந்தால் நெஞ்சு வலியே வந்திருக்கும்! விஷால் தடாலடி!
பல வருடங்களுக்கு பின் இரும்புத்திரை விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், அதன்பின் இப்போதுவரை ஒரு வெற்றிப்படத்திற்காக அவர் போராடி வருகிறார். ஒருபக்கம், சரியாக படப்பிடிப்புக்கு செல்லாமலும் தயாரிப்பாளர்களை கதறவைத்து வருகிறார். அதேபோல், பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடித்து கொடுக்காமல் இருக்கிறார். சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இதுவ்ரை திருமணமும் செய்து கொள்ளவில்லை.
மேலும், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என எல்லாவற்றிலும் போட்டியிட்டு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. சினிமாவில் பல எதிர்ப்புகளையும் சந்தித்தார். இவர் மீது வழக்குகளும் பாய்ந்தது. இப்படி பல காரணங்களால் தொய்வை சந்தித்தார். சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என எந்த படங்களும் ஓடவில்லை.
இதையும் படிங்க: எனக்கும் லட்சுமி மேனனுக்கும் affair? எங்க அப்பா செஞ்சதுதான் ஹைலைட் – மனம் திறந்த விஷால்
இப்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் வருகிற 15ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் தனக்கு கை கொடுக்கும் என விஷால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அவர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது செப்டம்பர் 15ம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: காரி துப்ப போறேன்.. அனகோண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. ரிது வர்மாவிடம் நடிகர் விஷால் ஆபாச பேச்சு!