Categories: Cinema News latest news

தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?

Annamalai: மிகப்பெரிய தலைவர்கள், வரலாற்று வீரர்கள் என இவர்களை திரும்பவும் இப்போது உள்ள தலைமுறைகள் பார்க்க இயலாது. அதனால் அவர்களை கண் முன் கொண்டு வர திரைப்படங்கள் பயோபிக் மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக கொடுத்து அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

அந்த வகையில் எத்தனையோ பயோபிக் நமது தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிறமொழி சினிமாக்களிலும் மிகப் பிரபலமான தலைவர்கள், அரசியல்வாதிகள் என அனைவரின் பயோபிக்கும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் இசைத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் இளையராஜாவின் பயோபிக் கூடிய சீக்கிரம் தயாராக இருக்கிறது.

Also Read

இதையும் படிங்க: இப்படி ராவா காட்டி இழுக்கிறியே ராசி கண்ணா!.. ராப்பகலா உன் நினைப்புதான் போ!.. போட்டோஸ் பாருங்க!..

அந்த பயோபிக்கில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார். அதை இயக்குவது அருண் மாதேஸ்வரன் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம். அதேபோல இப்போது அரசியல்வாதியில் மிகவும் சுறுசுறுப்பாகவும் யங் அரசியல்வாதியுமாக இருப்பவர் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பிஜேபியில் ஒரு மிக முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடியவர் தான் அண்ணாமலை.

அவருடைய வாழ்க்கை வரலாறை பயோபிக்காக எடுக்கும் முயற்சியில் கோலிவுட் களமிறங்கி இருக்கிறது. அவருடைய பயோபிக்கை காவல்துறைக்கு முன் காவல்துறைக்குப்பின் என இருவகையாக பிரிக்கலாம். ஏனெனில் பெரிய காவல்துறை அதிகாரியாக இருந்து அதன் பிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்தவர் தான் அண்ணாமலை.

இதையும் படிங்க: வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் படத்துக்கு இசை அவரா?!.. என்ன ஆகப்போகுதோ பார்ப்போம்!…

அதனால் இவருடைய வாழ்க்கையில் ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் இவருடைய வாழ்க்கை வரலாறை பயோபிக்காக எடுக்க தமிழ் சினிமா திட்டமிட்டு வருகிறது. அவருடைய பயோபிக்கில் அண்ணாமலையாக நடிக்கக் கூடியவர் நடிகர் விஷால் என்றும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு வருகின்றன.

அது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பிறகு தான் தெரியும். அதை இயக்கப் போவது யார் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் மட்டுமே நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. தோற்றத்திலும் சரி நிறத்திலும் சரி இருவருமே ஒன்று போல தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயும் இல்ல.. அல்லு அர்ஜுனும் இல்லை!.. அந்த ஹீரோவை இயக்க போகும் அட்லி!.. இது செம டிவிஸ்ட்!..

Published by
Rohini