எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்காத ஒரே நடிகர்!.. ரஜினி இறங்கி செய்த அந்த காரியம்!...
Mgr: எம்.ஜி.ஆர் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர். வறுமை காரணமாக சிறு வயதிலேயே நாடகங்களுக்கு நடிக்கப்போனவர். 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் பல அவமானங்களை சந்தித்திருகிறார். 10 வருடங்கள் கழித்தே அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்ததால் யார் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நினைப்பார் எம்.ஜி.ஆர். அப்படி பலருக்கும் உதவி இருக்கிறார். திரைத்துறையில் மட்டுமல்ல. பொது இடங்களில் கஷ்டப்படும் யாரை பார்த்தாலும் அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டே அங்கிருந்து போவார்.
அவரால் உதவி பெற்றவர்கள் பலரும் இருக்கிறார். நலிந்த நாடக நடிகர்கள், சினிமா கலைஞர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் குடும்பங்களில் திருமணம் எனில் அவர்கள் நேராக சென்று உதவி கேட்பது எம்.ஜி.ஆரிடம்தான். யாருக்கும் இல்லை என சொல்லாமல் அள்ளி வழங்கினார் எம்.ஜி.ஆர்.
அதனால்தான் அவரை எல்லோரும் வள்ளல் என சொன்னார்கள். சினிமாவில் பல நடிகர்கள், நடிகைகள் என எல்லோருக்கும் அவர் உதவி இருக்கிறார். தேங்காய் சீனிவாசன், சந்திரபாபு, கண்ணதாசன், நாகேஷ் என சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது திரையுலகை சேர்ந்த பலரும் எம்.ஜி.ஆரிடம் உதவி பெற்றனர்.
ஆனால், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த வி.கே.ராமசாமி அவரிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. அவரை அண்ணே என்று பாசமாக அழைப்பார் எம்.ஜி.ஆர். ஏனெனில், நாடகம் மற்றும் சினிமா உலகில் எம்.ஜி.ஆருக்கு சீனியர் அவர். எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் வி.கே.ராமசாமி நடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது திரைத்துறையை சேர்ந்த பலருக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார். வி.கே.ராமசாமி கொஞ்சம் கஷ்டத்தில் இருந்த சூழ்நிலையில் ‘நீ போய் எம்.ஜி.ஆரிடம் உதவி கேள்’ என அவரிடம் சொன்னார் நம்பியார். ஆனால், கடைசிவரை வி.கே.ராமசாமி அதை செய்யவில்லை.
அதற்கு காரணம் என்னவெனில் ஒருமுறை வி.கே.ராமசாமியிடம் ‘அண்ணே நான் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். என்னை வைத்து படம் தயாரியுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொன்னார். ஆனால், ‘சரியாக வருமா?’ என்கிற பயத்தால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் விகே ராமசாமி. எனவே, அவர் வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு இப்போது போய் உதவி கேட்பது சரியில்லை என்று வி.கே.ராமசாமி நினைத்தார்.
அதேநேரம், அது நடந்து பல வருடங்கள் கழித்து அருணாச்சலம் என்கிற படத்தை வி.கே.ராமசாமியை ஒரு தயாரிப்பாளராக சேர்த்து அப்படத்தில் வந்த லாபத்தில் பங்கு கொடுத்து உதவினார் ரஜினி.
இதையும் படிங்க: சிவாஜிக்கு சொன்ன கதையை ஆட்டய போட்ட எம்.ஜி.ஆர்!.. அது சூப்பர் ஹிட் படமாச்சே!…