Cinema News
அப்துல்கலாமின் வளர்ச்சியை முன்பே கணித்த கமல் பட நடிகர்! ஜனாதிபதி ஆனதும் அந்த நடிகரிடம் கலாம் சொன்ன வார்த்தை
Doctor APJ Abdul Kalam: இன்றும் என்றும் மறக்கமுடியாத தலைவர்களில் டாக்டர் அப்துல்கலாமும் ஒருவர். சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவராக வாழ்ந்தார் அப்துல்கலாம். இவரது எளிமையான தோற்றமும் தெளிவான பேச்சும் அனைவரையும் ஏன் உலகத் தலைவர்களையும் கவர்ந்தது. அரசியலை பொறுத்தவரைக்கும் சாதனைகளை சம்பாதிக்கிறோமோ இல்லையோ பல எதிரிகளை சம்பாதித்து விடுவோம்.
ஆனால் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தவரைக்கும் எந்த ஒரு விமர்சனத்திற்கும் இடம் கொடுக்காதவராகவே வாழ்ந்தார். இன்றைய இளம் தலைமுறையினர்தான் நாளைய சாதனையாளர்கள் என இளைஞர்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக எப்போதும் இருந்தார்.
இதையும் படிங்க: வாய்ப்ப கொடுத்தா பேசவே மாட்டாரோ.. பயில்வானை பங்கமாக கலாய்த்த மன்சூர்… தேவ தான்!
மாணவர்களிடம் அடிக்கடி உரையாடுவது, இந்தியாவின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது என இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மாணவர்களால்தான் முடியும் என்பது அவரது நம்பிக்கை.
இந்த நிலையில் 1986 ஆம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தார் அப்துல்கலாம். அவரை பற்றி தெரிந்து பிரமித்தவர்களில் முக்கியமானவர் நடிகர் யூகி சேது. இவரை பற்றி ஒரு பதிவு இருந்தால் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை எடுத்துச் சொல்லும் பதிவாக இருக்குமே என நினைத்தாராம் யூகி சேது.
இதையும் படிங்க: என் முகத்தை கூட காட்ட கூட முடியவில்லை!.. இன்ஸ்டா லைவில் சமந்தா வேதனை…
அதற்காக அப்துல்கலாமை பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்க பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அப்துல்கலாமை சந்திக்கவே முடியவில்லையாம். அதன் பிறகு அந்த நிலையத்தில் கேமிராமேனாக பணிபுரிந்த சீத்தாராமன் என்பவரின் நட்பு யூகி சேதுவுக்கு கிடைத்ததாம்.
அவரிடம் இந்த விவரங்களை சொல்லி அப்துல்கலாமை சந்திக்க ஏற்பாடு செய்ய சொன்னாராம். இது அப்துல்கலாம் காதுக்கும் போக ‘ நான் ஒரு சாதாரண ஆளு , என்னைப் பற்றி டாக்குமென்ரியா? ’ என மறுத்துவிட்டாராம்.
இதையும் படிங்க: ‘லியோ’ ரிலீஸுக்கு வந்த சிக்கல்! சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு
சாதாரணத்தில் இருந்துதான் அசாதாரணம் பிறக்கிறது என்று எவ்ளவோ சொல்லிப் பார்த்தும் அப்துல்கலாம் கேட்கவே இல்லையாம். அதன்பிறகு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்த அப்துல்கலாமை பார்க்க யூகி சேதுவுக்கு ஒரு வாய்ப்பு வர நேரில் போய் சந்தித்திருக்கிறார்.
அப்போது தான் டாக்குமெண்ட்ரி எடுக்க முயற்சி செய்ததை பற்றி அப்துல்கலாமிடம் நினைவு கூர்ந்தாராம் யூகி சேது. உடனே அப்துல்கலாம் ‘ஆமாம் . ஆமாம் . நியாபகம் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். உடனே யூகி சேது ‘ நான் அன்றைக்கே சொன்னேன். சாதாரணத்தில் இருந்துதான் அசாதாரணம் பிறக்கின்றது என்று. இன்று அது நிரூபணம் ஆகிவிட்டதல்லவா?’ என அப்துல்கலாமை நோக்கி கேட்டிருக்கிறார்.
ஆனால் அப்பவும் அப்துல்கலாம் யார் சொன்னது? இன்றும் நான் ஒரு சாதாரண ஆளுதான் என்று கூறினாராம். அன்றைக்கு மட்டும் அந்த டாக்குமென்ரியை யூகி சேது எடுத்திருந்தால் அப்துல்கலாமை பற்றி நிறைய விஷயங்களை நாம் இன்று தெரிந்திருப்போம். இந்த சுவாரஸ்ய தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.