நடிகர்களின் பெத்த சம்பளம்… திணறும் தயாரிப்பாளர்கள்.. பாலிவுட், டோலிவுட்டுக்கு ஓடும் இயக்குனர்கள்!

by sankaran v |   ( Updated:2025-04-08 21:06:33  )
ar murugadoss, atlee
X

ar murugadoss, atlee

ஏஆர்.முருகதாஸ் சமீபத்தில் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்கினார். ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் என்ற மெகா ஹிட் படம் கொடுத்தார். அடுத்து அல்லு அர்ஜூனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இவர்கள் தமிழ்த்திரை உலகை விட்டு வேறு மொழிகளில் போய் படம் இயக்கச் செல்கிறார்கள். இங்கு திறமையான நடிகர்கள் இல்லையா என்ற கேள்விக்குப் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைத் தந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

தமிழ்த்திரை உலகில் திறமையான இயக்குனர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் இருக்காங்க. இன்று தமிழ்த்திரைப்படத்தில் பிரபலமான இயக்குனர்கள் ஏன் பாலிவுட், டோலிவுட்டுக்குப் போயிருக்காங்க? அட்லீ பாலிவுட்ல ஷாருக்கானை வைத்து ஜவான் இயக்கினாரு. அங்கு வியாபாரம் அதிகம். சம்பளமும் அதிகம். ஷாருக்கானின் சொந்தப்படம். அது பெரிய வெற்றிப்படமாக அட்லீ மாற்றினாரு.

1000 கோடிக்கு மேல கலெக்ஷன் கிடைச்சது. அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா பெரிய வெற்றிப்படமானது. அதே இயக்குனருடன் பிளான் பண்ணி புஷ்பா 2 மெகா ஹிட் ஆனது. 2000 கோடி வரை நெருங்கி கலெக்ஷன் ஆனது. அங்கு அது சாத்தியம். ஆனால் தமிழ்ல பெரிய நடிகர்களின் கலெக்ஷன் 600 கோடிக்கு மேல கொடுக்க முடியல.

jawan, sikkandarஆகச்சிறந்தவர்கள் எல்லாம் இருந்தும் பெரிய கலெக்ஷனைக் கொடுக்க முடியல. இதுக்கு என்ன காரணம்னா நடிகர்கள் பெரிய சம்பளத்தைக் கேட்குறாங்க. அதேநேரம் அல்லு அர்ஜூன் கேட்கலையான்னு கேட்கலாம். பெரிய சம்பளம் சொல்றாங்க. தயாரிப்பாளரிடம் 50 கோடி அட்வான்ஸ் வாங்குறாங்க. படம் முடியற வரை தயாரிப்பாளருடன் தோழமையா முடிச்சிக் கொடுக்காங்க.

அந்த வியாபாரத்துல கிடைக்குற லாபத்துல பாதியை வாங்கிக்குறாங்க. ஆனா இங்கு பெரிய சம்பளம் வாங்கும் நடிகர்கள் படம் முடியறதுக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா வாங்கிடுறாரு. எந்தத் தயாரிப்பாளரும் வட்டிக்கு வாங்கித்தான் தொழில் செய்றாங்க. அப்படி இருக்கும்போது சம்பளத்தையும் வட்டிக்கு வாங்கிக் கொடுக்குறாரு. அதனால அவருக்கு அது பெரிய சுமை.

லாபத்துக்குள்ள தொகையை வட்டியே உறிஞ்சி எடுத்துடுது. 500 கோடி பட்ஜெட்ல தயாராகுற படம் 1000 கோடி கூட கலெக்ஷன் ஆகல. விஜய் படத்தோட நிலையும் அப்படித்தான் இருக்கு. வீரதீர சூரன் படம் சொன்ன நேரத்துல ரிலீஸ் ஆகாம இருந்ததுக்கு காரணம் பணப்பிரச்சனைதான். எடுத்த உடனே பெரிய அளவுல பணம் கொடுங்கன்னு கேட்டு வாங்குறாங்க நடிகர்கள். அதுக்கு அப்புறம் நீங்க லாபம் அடைஞ்சா என்ன? அடையலன்னா என்னங்கற மனநிலைக்கு இருக்காங்க. அந்த நிலை மாறாத வரை தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்குறது கஷ்டம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story