நடிகர்கள் எல்லாம் ஷூட்டிங் போகலை…ஃபேமிலி டூருப்பா… அடுத்த ப்ளான் இதான்..வெளுத்துவிட்ட பிரபலம்..!

Published on: January 3, 2024
---Advertisement---

Actors: தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரும், நடிகர் சங்க முன்னாள் தலைவருமான விஜயகாந்த் இறப்பு தமிழகத்தையே வாட்டியது. 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தியதாக அவர் மனைவி பிரேமலதா தெரிவித்து இருந்தார். ஆனால் இதில் நிறைய இளம் நடிகர்கள் வரவில்லை என்பதே தற்போதைய பிரச்னையாகி இருக்கிறது.

விஜயகாந்த் இறப்புக்கு பெரும்பாலும் 80களில் அவருடன் இணைந்து நடித்த பெரும்பான்மையாக நடிகர்கள் வந்த போதிலும் தற்போது இளம்நடிகர்கள் பலரும் மிஸ்ஸிங்க். இதில் ரொம்பவே ரசிகர்கள் கவலையாக பார்ப்பது சூர்யா, அஜித், தனுஷ், சிம்பு, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்று பிரபல நடிகர்களும் வராமல் இருந்தனர். 

இதையும் படிங்க: சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்!.. பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்…

இதனால் அது ரசிகர்களிடம் பேசு பொருளாகியது. அவர்கள் ஷூட்டிங்கில் இருக்காங்க என பலரும் கொடி பிடித்தனர். கலைஞர் இறப்பின் போது உடம்பு முடியாமல் அமெரிக்காவில் இருந்து உடனே ப்ளைட் பிடித்து வந்து நடுராத்திரியில் அவருக்கு அஞ்சலி செலுத்தியவர் விஜயகாந்த். ஆனால் அவருக்கு இளம் நடிகர்கள் இப்படி செய்யலாமா?

இதுகுறித்து ட்விட்டரில் புளூசட்டை மாறன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங் என காதுகுத்திய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள். ஆங்கில புத்தாண்டை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடிவிட்டு சென்னை வந்துவிட்டனர். ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஆறாம் தேதி நடைபெறும் ‘கலைஞர் 100’  கலைநிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டு இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அழுகாச்சி காவியமான பாக்கியலட்சுமி.. உங்க பாசம் புரியுது.. ஆனா ரொம்ப லெங்தா போகுதுப்பா!..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.