விஜயகாந்த் சமாதியை நாடக மேடையாக்கிய நடிகர்கள்... நிஜத்துலயுமா இப்படி நடிப்பாங்க? பொங்கும் பிரபலம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பைரவி என்ற படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இவரது மகன் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. இவர் தனது தந்தையை ரஜினி சார் மறந்துவிட்டார் என்று பல முறை ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார். அதே நேரம் கேப்டனின் மறைவின் போது நடந்த சில விஷயங்களையும் நினைவுபடுத்துகிறார். என்னன்னு பார்க்கலாமா...

கேப்டன் விஜயகாந்த் எத்தனையோ பேருக்கு உதவி செஞ்சிருக்காரு. அவங்க ஆபீஸ்க்குப் போனா நல்லா சாப்பாடு கொடுத்து மற்றவங்களை சந்தோஷப்படுத்திய நடிகர். அவரு இறப்புக்கு எத்தனை பேரு வந்தாங்க. ரஜினி, கமல், விஜய் வந்தாங்க. வேறு யாரு வந்தாங்க? தேடிப் பிடிக்கணும். குறிப்பிடற அளவுக்கு பெயர் சொல்லக்கூடிய நடிகர்கள் யாருமே வரல. விஷால் வீடியோ போட்டாரு. அவரு போடாமலேயே இருக்கலாம்.


அதுல ஸ்டார்ட் கேமரா சொல்லி கட் சொல்லலாம். பிரமாதமா நடிச்சிருக்காரு. இதை திரையில நடிச்சிருந்தா எங்கேயோ போயிருக்கலாமே. அண்ணா உங்களோட மரணத்துக்கு வரமுடிலன்னு அழுதுருக்காரு. யார் கேட்டா? உங்களைத் திரையில தான் நடிக்கிறதுக்கு கூப்பிட்டுருக்காங்க. கோடிக்கணக்குல சம்பளம் கொடுக்குறாங்க. அதை ஏன் ரியல் லைஃப்ல நடிக்கிறீங்க? அதுக்கு என்ன அவசியம்?

சாப்பாடு வீடியோவுக்கு யோகிபாபு என்னென்னமோ பண்றாரு. இது பொதுவெளியில காட்ட வேண்டிய விஷயமா? அதுக்கு அப்புறம் பெரிய பெரிய நடிகர்கள் ஒரு வாரம் கழிச்சி வந்தாங்க. கதறி கதறி அழுதாங்க. புரண்டாங்க. உருண்டாங்க. எலுமிச்சம்பழத்தை உருட்டி விட்டாங்க. சூடம் அணைச்சி சத்தியம் செஞ்சாங்க. என்னென்னமோ பண்ணினாங்க. விஜயகாந்த் சமாதியை இவங்க எல்லாம் சேர்ந்து நாடக மேடையா மாத்திட்டாங்க.

அவ்வளவு பெரிய ஆளா இருந்தவருக்கே யாரும் வரல. ஆனா ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கங்க. மக்கள் ஊருல இருந்து லாரி, வேன், பஸ், கார்னு கூட்டம் கூட்டமாக வந்தாங்க. கண்ணீர் அஞ்சலியை செலுத்தினாங்க. அது மறக்க முடியாத கூட்டம். நடிகர்கள்கிட்ட இருந்து எல்லாம் எதிர்பார்க்க முடியாது. நன்றி என்ற வார்த்தையை சினிமாவுல இருந்து எடுத்துடணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it