முன்னாள் காதலி பற்றி கூலா பதில் சொன்ன 3 பிரபலங்கள்!.. சிம்பு சொன்னதுதான் ஹலைட்!..
காதல் எல்லோருக்கும் பொதுவானது. நடிகர்களும் மனிதர்கள்தானே. எனவே, நடிப்பை தாண்டி அவர்களுக்கும் காதல் அரும்பும். சிலருக்கு மட்டுமே அந்த காதல் திருமணத்தில் முடியும். அதேபோல், அந்த திருமண வாழ்க்கை கடைசி வரை நீடிக்கும். ஆனால், சிலருக்கு சில வருடங்களில் அந்த காதல் திருமணம் கசந்து விடும்.
கமல் - சரிகா, பார்த்திபன் - சீதா, ராமராஜன் - நளினி ஆகியோரின் காதல் திருமணம் தோல்வியில்தான் முடிந்தது. அந்த வரிசையில் இப்போது தனுஷ் - ஐஸ்வர்யாவையும் சேர்த்து கொள்ளலாம். அதேநேரம், பாக்கியராஜ் - பூர்ணிமா, சுந்தர் சி - குஷ்பு, சூர்யா - ஜோதிகா போன்ற சிலர் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஆஸ்கார் விருதுக்கு வந்த ஆபத்து.. 15 வருஷம் கழிச்சு ரஹ்மான் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா
சினிமாவில் கதாநாயகியை காதலிப்பது போலவே நிஜ வாழ்வில் நடிகர், நடிகைகளுக்கு காதல் வருதுண்டு. அது எல்லாமே கைக் கூடும் என சொல்ல முடியாது. பெரும்பாலான நடிகர், நடிகைகளின் காதல் பிரேக்கப்பில்தான் முடிகிறது. அதற்கு பல காரணங்களும் உண்டு. சொந்தவாழ்வில் பல காதல் தோல்விகளை பார்த்தவர் சிம்புதான்.
முதலில் ஒரு நடிகரின் மகளை காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அவர் வேறு ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவை காதலித்தார். நயன்தாராவும் அவரை காதலித்தார். இருவரும் லிப்லாக் கொடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் வெளியானது.
ஆனால், சில காரணங்களால் அது பிரேக்கப் ஆனது. ஊடகம் ஒன்றில் ‘சில வருடங்களுக்கு முன் ஒருவேளை நயன்தாரா உங்களுக்கு மீண்டும் புரபோஸ் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’ என்கிற கேள்விக்கு ‘இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே’ என கூலாக பதில் சொன்னார் சிம்பு. சிம்புவை வைத்து போடா போடி படம் எடுத்த விக்னேஷ் சிவனை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நயன்.
இதையும் படிங்க: அந்த படம் ஓடலன்னா கன்னியாஸ்திரி ஆகி இருப்பேன்.. விஜயகாந்த் பட நடிகை சொன்ன பகீர் தகவல்…
அதேபோல், இசையமைப்பாளர் அனிருத்திடம் ‘உங்களுக்கு காதல் தோல்வி அனுபவம் உண்டா’ என கேட்டதற்கு பாடகி மற்றும் நடிகையை ஆண்ட்ரியாவை காதலித்தேன். அப்போது எனக்கு 19 வயது. அவருக்கு 25 வயது. ஆனால், சில காரணங்களால் அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என ஓப்பனாக சொன்னார்.
சமந்தாவை விட்டு பிரிந்த அவரின் கணவரும் நடிகருமான நாகசைத்தன்யாவிடம் ‘திடீரென சமந்தாவை சந்தித்தால் என்ன செய்வீர்கள்?’ என ரசிகர் கேட்டதற்கு ‘ஒரு ஹாய் சொல்வேன். அவருக்கு ஒரு ஹக் கொடுப்பேன்’ என சிரித்துக்கொண்டே சொன்னார். ஒன்றாக சினிமாவில் நடித்த காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.