பாம்புனா கொத்ததான் செய்யும்.. என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா? வடிவேலுவை தோலுரித்த ஆர்த்தி

by Rohini |   ( Updated:2024-02-12 06:56:23  )
vadi
X

vadi

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

பழைய மாதிரி அவருடைய காமெடிகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அதுவும் ஆரம்பத்தில் வடிவேலுவை சுற்றி குரூப் நடிகர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் யாரும் வடிவேலுவுடன் இல்லை. அதற்கு காரணமே வடிவேலுதான். அந்தளவுக்கு கூட இருக்கிறவர்களுக்கே துரோகம் செய்யக் கூடியவர், அவர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என அந்த நடிகர்களே பல பேட்டிகளில் சொல்லி கேட்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: காதலர் தினத்தை ஒட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகும் அஜித்! அப்பாடா இப்பவாவது சொல்றீங்களே

இந்த நிலையில் நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் வடிவேலுவை பற்றி ஒரு பேட்டியில் கூறியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நன்றாக நடித்துக் கொண்டிருப்பாராம். அந்த சீன் எல்லாம் முடிந்த பிறகு வடிவேலு ஆர்த்தியை அழைத்து ‘செல்லம் செமயா இருந்துச்சு. நல்லா பண்ணிட்ட’ என மனதார பாராட்டுவாராம். ஆனால் படத்தில் அந்த சீனே இருக்காதாம்.

தன்னை விட நன்றாக ஒரு காமெடி நடிகர் நடித்துவிட்டால் படத்தில் அந்த சீனே இல்லாமல் செய்து விடுவாராம் வடிவேலு. இதை போல ஒரு படத்திற்கான ஆர்த்தியின் கணவர் கணேஷ் மேக்கப் எல்லாம் போட்டு தயாராக இருந்தாராம். சிறிது நேரத்தில் டைரக்டர் வந்து உங்க கேரக்டருக்கு வடிவேலு வேறொரு நடிகரை நடிக்க அழைத்து வந்துவிட்டார் என கூறி அனுப்பி விட்டார்களாம்.

இதையும் படிங்க: திருமண கோலத்தில் வந்திறங்கிய கதிர், ராஜீ… பாக்கியா பார்த்த அதிர்ச்சியில் கோபி…

அதே போல் 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையும் ஆர்த்தியையும் கமிட் செய்திருக்கிறார் சிம்புதேவன். ஆனால் ‘அவர்கள் எல்லாம் பார்த்த மூஞ்சிகள்’ என வடிவேலு சொன்னதின் பேரில் அந்தப் படத்தில் இருந்து சரளாவையும் ஆர்த்தியையும் விலக்கி விட்டார்களாம். ஆனால் அந்த படம் கடைசியில் டேக் ஆஃப் ஆகவே இல்லை என ஆர்த்தி கூறினார்.

மேலும் கூறிய ஆர்த்தி ‘எங்க மூஞ்சி பார்த்த மூஞ்சினா இப்போ வடிவேலுவை பார்க்கவே பல வருடங்கள் ஆகிவிட்டதே. இதெல்லாம் கர்மாதான். பாம்புனா கொத்ததான் செய்யும். அதை மாற்றவே முடியாது. எல்லாம் ஓகேனு போய்கிட்டே இருக்கனும்’ என கூறினார்.

இதையும் படிங்க: ஜனகராஜுக்கு பேர் வாங்கி கொடுத்த அந்த காமெடி!.. எல்லாத்துக்கும் ரஜினிதான் காரணமாம்!..

Next Story