நான் எப்படி அவர் கூட நடிக்கிறது?!.. பயந்த நடிகை!.. அஜித் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!..
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். பல வருடங்கள் சாக்லேட் பாயாக காதல் கதைகளில் நடித்து பின்னர் பில்லா திரைப்படம் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறினார். மங்காத்தா திரைப்படம் அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது. அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.
ரசிகர் மன்றங்களையே கலைத்த பின்பும் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. விஜய்க்கு போட்டி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜயின் வாரிசு படம் வெளியானபோது தனது துணிவு படத்தை துணிந்து இறக்கினார். ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் உருவான துணிவு படம் நல்ல வசூலை பெற்றது.
இதையும் படிங்க: அந்த நடிகருக்கு வில்லனா நடிக்கணும்!.. எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு ஆசையா?!..
சீனியர் நடிகர்களான ரஜினி, கமல் இப்போதும் கலக்கி கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அடுத்து விஜய் - அஜித் என இருவரும் இருக்கிறார்கள். இதில், விஜய் அரசியலுக்கு போவதாக அறிவித்துவிட்ட நிலையில் எல்லோரின் கவனமும் அஜித் பக்கம் திரும்பி இருக்கிறது. இனிமேல், தொடர்ந்து அதிகமான படங்களில் நடிக்கவும் அஜித் முடிவெடுத்திருக்கிறார்.
இந்நிலையில், அஜித்துடன் நடிக்க பயந்த ஒரு நடிகை பற்றி பார்ப்போம். நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் அபிநயா. அதன்பின் ஈசன், ஏழாம் அறிவு, வீரம், பூஜை, தன் ஒருவன், தாக்க தாக்க, நிசப்தம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி பெண் என்பது பலருக்கும் தெரியாது. அப்படி இருந்தும் இவ்வளவு படங்களில் நடித்த திறமையான பெண் இவர். அஜித் நடித்த வீரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ‘அஜித் சாருடன் என்னால் எப்படி நடிக்க முடியும்?’ என பயந்திருக்கிறார்.
இதை அப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்திடம் சொல்ல அவர் அபிநயாவை அழைத்து ‘என்னை அஜித்தாக பார்க்க வேண்டாம். உங்களின் அண்ணனாக பாருங்கள். ஈசியா இருக்கும்’ என சொல்லி அவரை நடிக்க வைத்திருக்கிறார். வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் அபிநயா.