கமல் படத்தில் ஒரே தொந்தரவு… சினிமாவே வேண்டாம் என ஓடிய பிரபல நடிகை!

Kamalhassan: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வர வேண்டியவர். ஒரே படத்தில் நடந்த தொந்தரவுகளால் சினிமாவே வேண்டாம் என கும்பிடுப்போட்டு சென்றதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.

அபிராமி தமிழ், மலையாளம், கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களிலில் நடித்தவர் தற்போது சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார். இவரின் மிடில் கிளாஸ் மாதவன் மற்றும் சார்லி சாப்ளின் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க:39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!

திவ்யா எனப் பெயர் கொண்டவர் கமலின் குணா படத்தினை பார்த்து விட்டு தன்னுடைய பெயரை அபிராமி என மாற்றிக்கொண்டார். கமலுக்கே ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்தவர். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். 10 வருட இடைவெளிக்குப் பிறகு, 2014ல் மீண்டும் திரையுலகிற்கு நடிக்க திரும்பினார். ஆனால் மாறா படத்தில் தான் அவருக்கு முன்னணி நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

புலவர் பாவனனின் பேரனான ராகுலை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் சில ஆண்டுகள் கழித்து பெண் குழந்தையை தத்தெடுத்தனர். விருமாண்டியின் வெற்றிக்கு பின்னர் அவர் சினிமாவில் நீடித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வெளியேறியதற்கு காரணம் பாலியல் தொந்தரவு தானாம்.

இதையும் படிங்க:சொந்த படத்துக்கு மட்டும் தான் வருவேன்!.. ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா.. பிரியாமணி தான் கடைசியா!..

இதுகுறித்து பேசிய பிரபல யூட்யூபர் ரங்கநாதன் விருமாண்டி படத்தில் நடித்த ஒரு நடிகர் தான் அந்த தொந்தரவை தொடர்ந்து கொடுத்தாராம். அதனால் தான் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார் அபிராமி எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதை எந்த நடிகர் செய்தார் என்பதை பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோவில் வெளிடவில்லை.

 

Related Articles

Next Story