கமலுடன் மீண்டும் இணையும் அந்த நடிகை!... உதட்ட பத்திரமா பாத்துக்க செல்லம்!..

Kamal235: விக்ரம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் பிஸியான நடிகராக கமல்ஹாசன் மாறிவிட்டார். ஏனெனில், அரசியல், பிக்பாஸ் என 4 வருடங்கள் அவர் சினிமாவில் தலை காட்டவில்லை. அப்போதுதான் லோகேஷுடன் கூட்டணி அமைத்து அவர் தயாரித்து, நடித்த விக்ரம் திரைப்படம் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட் அடித்தது.

கமல் நடிப்பில் வெளியான எந்த படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை என சொல்லுமளவுக்கு ரூ.400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, ரூ.30 கோடியாக இருந்த தனது சம்பளத்தை அதிரடியாக ரூ.150 கோடியாக ஏற்றிவிட்டார்,. மேலும், சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என தயாரிப்பிலும் பிஸியாகி விட்டார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் ரஜினியை மயக்கிய மனைவி லதா… காதலை சூப்பர்ஸ்டார் யார்கிட்ட முதலில் சொன்னாரு தெரியுமா..?

ஒருபக்கம், ஹெச்.வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம் என டேக் ஆப் ஆகிவிட்டார். முதலில் ஹெச்.வினோத் படத்தில் நடித்தாலும் அப்படத்திற்கு 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திற்காக மீண்டும் சில நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

எனவே, இப்படம் முடிந்தபின் அவர் ஹெச்.வினோத் படத்தில் நடிக்கவுள்ளார். அப்படம் முடிந்த பின் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், ஹெச்.வினோத் படத்தை விட மணிரத்தினத்தின் பட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, திரிஷா என இரண்டு நடிகைகளின் பெயர் அடிபட்டது. அதன்பின் திரிஷா மட்டும் உறுதி என சொல்லப்பட்டது.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற நவம்பர் 17ம் தேதி அதாவது கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. விருமாண்டி படத்தில் அபிராமிக்கு கமல் தனது ஸ்பெஷல் லிப்லாக் எல்லாம் கொடுப்பார். எனவே, மணிரத்னம் படத்திலும் அதுபோல காட்சிகள் வருமா என ரசிகர்கள் இப்போதே யோசிக்க துவங்கிவிட்டனர்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்துக்கு வில்லன் இவர் தானா? அதுக்கு ரஜினிக்கே டபுள் ஆக்‌ஷன் போட்றலாம்.. ரெண்டு ஒன்னு தான்..!

 

Related Articles

Next Story