டெடிகேஷனா இருக்க இப்படியா? விஜய் சேதுபதியின் கேரவனுக்குள் போய் பார்த்ததும் ஷாக் ஆன அபிராமி

sethu
Actor Vijaysethupathi: தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் அவருடைய 50 வது படமான மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடி வருகிறது. நீண்ட நாளுக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகும் படம் இது.
அதுவரை வில்லனாகவே பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வந்தார் விஜய் சேதுபதி. அதனால் ஹீரோவாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு சரிவர அமையவில்லை. ஆனால் அது அவருடைய ஐம்பதாவது படத்தில் நடந்திருக்கிறது. அதுவும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இதையும் படிங்க: ரஜினியுடன் வொர்க் பண்ண தயங்கிய பிரபலம்! கமல் சொன்ன ஒரு வார்த்தை.. தடபுடலாக ரெடியான விருந்து
இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை அபிராமி ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் விஜய் சேதுபதியை பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. விஜய் சேதுபதியின் கேரவனில் முழுவதுமாக ராமர் புகைப்படங்கள் ஒட்டி இருக்குமாம்.
ஒரு முறை விஜய் சேதுபதியை பார்க்க கேரவனுக்கு சென்று இருக்கிறார் அபிராமி. விஜய் சேதுபதியை பொருத்தவரைக்கும் அவர் ஒரு முழு ரிலிஜியனிஸ்ட் கிடையாது என்பது தெரியும். ஆனால் அந்த கேரவனில் உள்ளே போய் பார்க்கும் பொழுது முழுவதுமாக ராமரின் புகைப்படங்கள் ஒட்டி இருந்ததாம்.
இதையும் படிங்க: இந்திப் படத்தில் இருந்து இத்தனை படங்கள் ரீமேக்கா? அட, இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!
அதை பார்த்ததும் அபிராமி விஜய் சேதுபதி இடம் ஏன் ஒரே ராமர் புகைப்படங்களாக இருக்கிறது என கேட்டிருக்கிறார். அதன் பிறகு தான் அவருக்கு தெரிந்ததாம். ஒரு ரோலுக்காக ராமர் கதையிலிருந்து அவருக்கு இன்ஸ்பிரேஷன் தேவைப்பட்டது என்று. அதன் காரணமாகவே ராமரின் புகைப்படங்களை அவருடைய கேரவனில் ஒட்டி இருந்தாராம் விஜய் சேதுபதி.
இது அவருடைய டெடிகேஷனுக்கு உள்ள அடையாளமாக பார்க்கப்படுகிறது என அபிராமி அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனையோ நடிகர்கள் தன்னுடைய நடிப்பு எதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக எதை எதையோ செய்கிறார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த செயலும் அபிராமியை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையும் படிங்க: காமெடி நடிகருக்காக அப்பாவை தட்டி கேட்ட விஜய்!.. நட்புக்கு ஒன்னுன்னா விடமாட்டாராம்!…