லட்டு போல வந்த பட்டம்! வேணாம் என உதறித்தள்ளிய நடிகை - வேண்டானாலும் நீங்க ‘நடிப்பு அரக்கி’தான்

by Rohini |   ( Updated:2023-11-04 19:13:49  )
trish
X

trish

Nadippu Arakkan: சமீபகாலமாக சினிமாத் துறையில் கொடுக்கப்படும் பட்டங்களால் ஏராளமான பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம்.எம்ஜிஆர் , சிவாஜி காலத்திற்கு முன்பே இந்த பட்டங்கள் கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. எம்ஜிஆரையும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருக்கிறோம். அதே போல் பாகவதரையும் அந்த கால சூப்பர் ஸ்டார் என்றே அழைத்திருக்கிறோம்.

இந்தப் பட்டங்கள் அவரவர் விருப்பப்படி திறமைகளை பொறுத்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கப்பட கூடியது. இந்த பட்டத்திற்கான பிரச்சினை விஜயை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்தது என சமீபகாலமாக நாம் பார்த்திருப்போம்.

இதையும் படிங்க: பாத்து செய் செல்லம் பசங்க மனசு வீக்கு!.. ஹார்ட்பீட்டை எகிற வைக்கும் மாளவிகா மோகனன்…

சரத்குமார் விஜயை சூப்பர் ஸ்டார் என சொன்னது ஏதோ ஒரு பூகம்பமே வந்த மாதிரி புரட்டி போட்டது. அதற்கெல்லாம் விடை கொடுக்கும் வகையில் லியோ வெற்றிவிழாவில் விஜய் பேசும் போது ‘புரட்சித்தலைவர்னா ஒருத்தர்தான், உலக நாயகன்னா ஒருத்தர்தான், கேப்டன்னா ஒருத்தர்தான், தல னா அதுஒருத்தர்தான்’ என்று தெளிவாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் புதியதாக ஒரு பட்டம் சினிமாவை ஆட்டிப்படைத்திருக்கிறது. நடிப்பு அரக்கன் என எஸ்.ஜே.சூர்யாவை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரகடனப்படுத்தியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் அது கச்சிதமாக பொருந்தியிருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவுக்கு.

இதையும் படிங்க: மது – மாது.. தடம்புரண்ட சுதாகரின் வாழ்க்கை!.. கனவு நாயகன் கோமாளி ஆன கதை!..

அதே வகையில் நடிப்பு அரக்கி என்ற பட்டமும் இப்போது வைரலாகி வருகின்றது. அது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சொல்லியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக் கடைதிறப்பு விழாவிற்கு சென்ற போது அவரிடம் சில கேள்விகளை நிரூபர்கள் கேட்டனர்.

அப்போது ஒரு நிரூபர் ‘எந்த கதாபாத்திரமானாலும் ஈசியாக நடித்து விடுகிறீர்கள். அதுவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறீர்கள். இப்ப இருக்கிற நடிகைகளில் எல்லாவித கதாபாத்திரத்திற்கும் பொருந்தக் கூடிய நடிகையாகவும் இருக்கிறீர்கள். அதனால் நடிப்பு அரக்கி என பட்டம் கொடுக்கலாமா?’என கேட்டார்.

இதையும் படிங்க: முதல் சந்திப்பிலேயே விக்கியை ஃபிளாட் ஆக்கிய நயன்!.. அப்படி என்ன நடந்துச்சி தெரியுமா?…

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நல்லா நடிக்குறீங்கனு சொல்றீங்களே அதுவே போதும்ங்க. இந்த பட்டமெல்லாம் வேணாமுங்க என்று நழுவி விட்டார். ஆனால் அந்த நிரூபர் சொன்ன மாதிரி இப்ப இருக்கிற நடிகைகளில் மிகவும் எதார்த்தமான நடிகையை வெளிப்படுத்துவதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி ஒரு நடிகையை பார்க்க முடியாது என்பதுதான் உண்மை.

Next Story