Connect with us
vikram

Cinema News

ஐஸ்வர்யா ராஜேஷுக்கா இந்த நிலைமை? ‘துருவநட்சத்திரம்’ படத்தில் ஏற்பட்ட குளறுபடி!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல வருடங்களாக தயாராகி கொண்டு வரும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் விக்ரம் நடிக்க அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து ராதிகா சரத்குமார், சிம்ரன், பார்த்திபன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றனர்.

vikram1

vikram1

ஸ்பை திரில்லர் கான்செப்ட்டில் தயாராகி வரும் இந்தப் படம் எப்படியும் இந்த வருடம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் டிரெய்லரும் சில வருடங்களுக்கு முன்பாகவே ரிலீஸ் ஆனது. இதற்கிடையில் படத்தின் ஒரு பாடலும் வெளியானது. பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : அடுத்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தே ஓயல.. அதுக்குள்ள அடுத்த விஜயா!.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!…

படத்திற்கு ஹரீஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருக்கிறார். வெளியான ஒரு மனம் என்ற பாடலில் விக்ரம் ரித்துவர்மாவையும் ஐஸ்வர்யா ராஜேஷையும் காதலிப்பது போல படமாக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளையும் அழித்துவிட்டார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

vikram2

vikram2

ஏற்கெனவே எல்லா எடிட் வேலைகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு காத்திருந்த நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி  மீண்டும் எடிடி செய்திருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மீண்டும் வெளியான இரண்டாவது சிங்கிளில் கூட ஐஸ்வர்யா ராஜேஷ் பெயரை தவிர்த்து அனைத்து நடிகர்களின் பெயர்களும் இருந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : என்னை பார்த்தாலே ரஜினிக்கு இதுதான் தோணும்! நடிகை சொன்ன சூப்பர் சீக்ரெட்

இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது படத்தில் இருந்தே ஐஸ்வர்யா ராஜேஷை தூக்கிவிட்டதாகவே தெரிகிறது. 5 வருட உழைப்பு. ஒரு நிமிடத்தில் காணாமல் போய்விட்டது என்றே கூறுகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top