Connect with us
rajini

Cinema News

என்னை பார்த்தாலே ரஜினிக்கு இதுதான் தோணும்! நடிகை சொன்ன சூப்பர் சீக்ரெட்

ரஜினினாலே மாஸ்தான். அதுவும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் போதுதான் கூடுதல் மாஸ் கிடைக்கின்றது. எல்லாருக்கும் பிடித்தமான நடிகராகவும் வலம் வருகிறார் நம்ம சூப்பர் ஸ்டார். கோலிவுட்டையும் தாண்டி மற்ற மொழி சினிமாக்களிலும் ரஜினிக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழில் திமிரு என்ற படத்தின் மூலம் தமிழில் முதன் முதலாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி.

படையப்பாவின் எதிரொலியா?

அவர் ரஜினியின் தீவிர ரசிகையாம். ரஜினி படத்தை தவிர வேறெந்த  நடிகரின் படங்களையும் பார்க்க மாட்டாராம். அதுவும் முதல் நாள் ஷோ தான் போய் பார்ப்பாராம். அப்படி பார்த்த ஒரு படம் தான் படையப்பாவாம். அதுவும் ஸ்ரேயா ரெட்டி பள்ளி பருவத்தில் பார்த்த படமாம்.

rajini1

rajini1

அந்தப் படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு நடிச்சால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஒரு தடவையாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நடித்தது தான் அந்த திமிரு ஈஸ்வரி கதாபாத்திரமாம். மேலும் ஸ்ரேயா ரெட்டிக்கு ரொமான்ஸ் வாராதாம். டான்ஸ் வராதாம். அதனாலேயே பெர்ஃபாமன்ஸ் பக்கம் வந்து விட்டாராம்.

இதையும் படிங்க ; கார் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்! அச்சச்சோ இவருக்கு போய் இப்படியா?

ஐட்டமா? ஓடிரு

அதாவது நடிக்க வேண்டும். அதுவும் தரமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தாராம். திமிரு படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ஸ்ரேயா ரெட்டிக்கு போன் செய்து ஒரு ஐட்டம் சாங் இருக்கு, நடிக்கிறீர்களா? என்று  கேட்டாராம்.

rajini2

rajini2

அவ்ளோதான். போனிலேயே சரமாரியாக திட்டிவிட்டாராம் ஸ்ரேயா ரெட்டி.ஏனெனில் திமிரு படத்தில் எப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்? என்னை போய் ஐட்டம் பாடலுக்கு ஆட கூப்பிடுறானு திட்டி விட்டாராம். மேலும் ரஜினியை சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவராம் ஸ்ரேயா ரெட்டி. அவரை இன்னொரு அப்பா என்று தான் கூறினார் ஸ்ரேயா ரெட்டி.

இதையும் படிங்க ; கவுத்துப் புட்டீயே ரஞ்சிதமே! கைலாசத்தில் இப்படி ஒரு பதவியா? ஒரே ஜலபுலா ஜங் தான்

போயஸ் கார்டனில் சின்ன வயதில் இருந்தே அனைவருன் சேர்ந்து விளையாடியிருக்கிறார்களாம். மேலும் ரஜினி ஸ்ரேயாவை பார்த்து அடிக்கடி நடிகை தபு மாதிரியே இருக்கிறாய் என்று சொல்லுவாராம். ஆனால் சமீபகாலமாக அனைவரும் என்னை அப்படித்தான் சொல்கிறார்கள், முதலில் சொன்னது ரஜினிதான் என்று ஸ்ரேயா கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top